கேரள மாநிலம் வைக்கம் நகரில் கடந்த மாதம் தமிழக முதல்வர் மு.கஸ்டாலின், கேரள முதல்வர் பினராயி விஜயன் ஆகியோர் கலந்து கொண்ட பெரியார் நினைவிட திறப்பு விழா நடந்தது. இந்த விழாவின்போது கோட்டயம் எம்.பி. பிரான்சிஸ் ஜார்ஜ், வைக்கத்தில் இருந்து சென்னை, வேளாங்கண்ணிக்கு தமிழ்நாடு அரசு பஸ் இயக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
இந்த கோரிக்கையை ஏற்ற முதல்வர் ஸ்டாலின் உடனடியாக பஸ் இயக்கும்படி தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கருக்கு உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து நேற்று வைக்கத்தில் இதற்கான விழா நடந்தது.வைக்கத்தில் இருந்து சென்னை மற்றும் வேளாங்கண்ணிக்கும் புதிய பஸ்களை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த விழாவுக்கு கேரள மாநில திமுக அமைப்பாளர் கே. ஆர். முருகேசன் முன்னிலை தாங்கினார்.
நிகழ்ச்சியில் கேரள அரசு அதிகாரிகள், கோட்டயம் எம்.பி மற்றும் தென்காசி தெற்கு மாவட்ட திமுக முன்னாள் செயலாளர் சிவ பத்மநாபன், கேரள மாநில திமுக இளைஞர் அணி அமைப்பாளர் பிரின்ஸ்,துணை அமைப்பாளர் விபின்முருகேசன்,ஹரிகுமார், மாவட்ட திமுக செயலாளர் ரெஜிராஜ்,சிற்றரர் ரவிச்சந்திரன்,துரை,பேச்சிமுத்து, உள்ளிட்ட ஏராளமான திமுகவினர் பங்கேற்றனர்.