Skip to content

மாணவி பாலியல் வழக்கு : உச்சநீதிமன்றத்தில் அதிமுக கேவியட் மனு

 சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த 23ம் தேதி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டாா்.  பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள நபர் ஞானசேகரன் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் சிறப்பு விசாரணை குழு அமைத்து உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் அதிமுக கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது. அதிமுக சார்பில் வழக்கறிஞர் வரலட்சுமி உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனுத்தாக்கல் செய்துள்ளார். அதில் எஸ்ஐடி அமைத்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்யும்போது தங்கள் தரப்பு கருத்தையும் கேட்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதுபோல பாமகவும் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது.

error: Content is protected !!