இந்தியா- நியூசிலாந்துக்கு இடையேயான 3வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் நேற்று இரவு அகமதாபாத்தில் நடந்தது. டாஸ்வென்ற இந்திய அணி முதலில் பேட் செய்தது. 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 234 ரன்கள் குவித்தது. இந்திய வீரர் சுப்மன்கில்126ரன்கள் குவித்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இவர்63 பந்துகளில் 12 பவுண்டரி, 7 சிக்சர்கள் விளாசி இந்த சாதனையை நிகழ்த்தி இருந்தார்.
அடுத்து ஆடிய நியூசிலாந்து 12.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 66 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இந்தியா 168ரன்கள் வித்தியாசத்தில் டி20 போட்டியை வென்றது. இந்த வெற்றியின் மூலம் இந்த தொடரையும் 2-1 என்ற நிலையில் கைப்பற்றியது.
டி20 போட்டியில் இந்தியா பெற்ற மிகப்பெரிய வெற்றியாக இது பதிவாகி உள்ளது. இதற்கு முன் இந்தியா அயர்லாந்துக்கு எதிராக 143 ரன்கள் வித்தியாசத்தில் டி20 போட்டியை வென்றதே அதிக வித்தியாசத்தில் வென்றதாக பதிவாகி இருந்தது. அந்த சாதனை நேற்று முறியடிக்கப்பட்டது. அத்துடன் ஒரு இந்திய வீரர் டி 20 போட்டியில் அதிக ரன்கள் எடுத்ததும் நேற்று தான் சுப்மன் கில் அந்த சாதனையை (126ரன்கள்) நேற்று நிகழ்த்தி இருந்தார். இதற்கு முன் கோலி ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 122 ரன்கள் எடுத்ததே இந்திய வீரரின் அதிகபட்ச ஸ்கோராக இருந்தது. அந்த சாதனையை கில் நேற்று முறியடித்தார்.