தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கள ஆய்வுக்காக நேற்று வேலூர் புறப்பட்டு சென்றார். இரவில் வேலூரில் தங்கிய அவர் இன்று காலை நடைபயிற்சி சென்றார். அப்போது வேலூர் புறநகரில் உள்ள அலமேலு மங்காபுரம் ஆதிதிராவிட ர் நல தொடக்கப்பள்ளிக்கு சென்றார். அப்போது அங்கு குழந்தைகளுக்கு காலை சிற்றுண்டி வழங்க தயாராகிக்கொண்டிருந்தது.
அங்கு சென்று முதல்வர் ஸ்டாலினை சிற்றுண்டியை ஒரு கரண்டியில் எடுத்து சுவைத்து பார்த்தார். பின்னர் அங்கிருந்த குழந்தைகளிடம் காலையில் சாப்பிட்டீர்களா என கேட்டார். அதற்கு குழந்தைகள் இன்னும் சாப்பிடவில்லை என்றனர். உடனடியாக குழந்தைகளுக்கு சிற்றுண்டி வழங்குங்கள் என்று அங்கிருந்தவர்களிடம் கூறிய முதல்வர் உணவை தட்டில் வைத்து அதை அமர்ந்திருந்த குழந்தைகளிடம் வழங்கி அந்த திட்டத்தை தொடங்கி வைத்தார்.