Skip to content

கரூர் கல்லூரி மாணவிகளிடம் விஜய் எழுதிய கடித நகலை வழங்கிய த.வெ.க மகளிர் அணி…

  • by Authour

அண்ணா பல்கலைக்கழகத்தில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான மாணவிக்கு ஆதரவாக தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய், தன் கைப்பட எழுதிய கடிதத்தின் நகலை கரூர் மாவட்ட மகளிர் அணி நிர்வாகிகள் கரூர், தான்தோன்றிமலையில் உள்ள அரசு கலைக்கல்லூரி முன்புறம் கல்லூரி மாணவிகளுக்கு கொடுத்து வருகின்றனர்.

பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான மாணவிக்கு ஆதரவாக விஜய் கைப்பட எழுதிய கடிதத்தில் பெண்களுக்கு எதிராக நடக்கும் சமூக அவலங்கள், சட்டம் – ஒழுங்கு சீர்கேடு, பாலியல் குற்றங்கள் குறித்தும், வன்கொடுமைகளுக்கு எதிராக ஒரு அண்ணனாக எல்லா சூழல்களிலும் நிச்சயமாக உங்களுடன்

உறுதியாக நிற்பேன் என்றும், ஆளுங்கட்சிக்கு எதிரான வாசகங்களும் இடம் பெற்றுள்ளன.

அந்த கடிதத்தின் நகலை கரூர் மாவட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் மகளிரணி சார்பில் கரூர் அரசு கலைக் கல்லூரி வாயில் முன்பு மகளிரணி உறுப்பினர்கள் வழங்கினர். அப்போது அரசு கலைக் கல்லூரி முன்பு அனுமதியின்றி கடிதம் வழங்கியது குறித்து போலீசார் கேள்வி எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

error: Content is protected !!