அண்ணா பல்கலைக்கழக சம்பவத்தை கண்டித்து அதிமுகவினர் இன்று அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஆா்ப்பாட்டம் நடத்தினர். புதுக்கோட்டையில் இன்று வடக்கு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள ரவுண்டானா அருகில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினரை போலீசார் கைது செய்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் தெற்கு மாவட்ட செயலாளர் வைரமுத்து, முன்னாள் எம்.எல்.ஏக்கள் ராஜநாயகம், நெடுஞ்செழியன், ஒன்றிய செயலாளர் ராமசாமி, கருப்பையா, நகர செயலாளர்கள் சேட்டு, பாஸ்கர், உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர். அனைவரும் கைது செய்யப்பட்டு திருவப்பூரில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டனர்.