Skip to content
Home » கவர்னருடன் விஜய் பேசியது என்ன? பரபரப்பு அறிக்கை

கவர்னருடன் விஜய் பேசியது என்ன? பரபரப்பு அறிக்கை

  • by Authour

தமிழக வெற்றிக்கழகத் தலைவர்  நடிகர் விஜய் இன்று மதியம் 12.45 மணிக்கு  கவர்னர் ரவியை  சந்தித்தார். அவருடன்  கட்சியின் பொதுச்செயலாளர்  ஆனந்த், பொருளாளர்  வெங்கட்ராமன் ஆகியோரும் உடன் சென்றிருந்தனர். சுமார் 30 நிமிடம் இந்த சந்திப்பு நடந்தது.  கவர்னரை  சந்தித்து விட்டு வெளியே வந்த  விஜய்  காரின் பின்பக்க  கண்ணாடியை திறந்து  பத்திரிகையாளர்களை பார்த்து  கையசைத்து விட்டு  சென்று விட்டார்.

அதைத்தொடர்ந்து  தவெக சார்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது.

தலைமை நிலையச் செயலக அறிவிப்பு என்ற பெயரில் இடம் பெற்ற அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இன்று  தமிழக  வெற்றிக்கழகத்தின் தலைவர் தலைமையில் ஆளுநர் ரவியை சந்தித்து மனு அளித்தோம். எங்கள் மனுவில்,   தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டும் என்றும்,  அனைத்து இடங்களிலும் பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய  உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளோம்.

மேலும் தமிழகம் முழுவதும் அண்மையில் பெய்த பருவமழை மற்றும்  பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்னும் உரிய நிவாரணம் கிடைக்கவில்லை. இந்த விவகாரத்தில் மாநில அரசு கேட்கும  நிவாரணத் தொகையை மத்திய அரசு முழுமையாக வழங்க வேண்டும் என  மனுவில் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

எங்கள் கோரிக்கைகளை கேட்ட  கவர்னர் அவற்றை பரிசீலிப்பதாக  கூறினார்.

இந்த அறிவிப்பில் பொதுச்செயலாளர் ஆனந்த் கையெழுத்திட்டு உள்ளார்.