அண்ணா பல்கலைக்கழக சம்பவம் தொடர்பாக தமிழகம் முழுவதும் அதிமுகவினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னை உள்பட பல்வேறு இடங்களிலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வரும் அதிமுகவினர் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழக சம்பவத்தில் நீதி கேட்டும், அதிமுகவினர் கைதைக் கண்டித்தும் எடப்பாடி பழனிசாமி கருத்து தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து திருச்சி மணப்பாறை பெரியார் சிலைக்கு அருகே திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் தலைமையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு
நிலவியது . இந்நிலையில் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினரை கைது செய்தனர். கைது செய்த அனைவரையும் மணப்பாறை விராலிமலை ரோடு, மாரியம்மன் கோவில் திருமண மண்டபத்தில் அதிமுகவினரை தங்க வைக்கப்பட்டுள்ளனர்.