கோவை, ஆனைமலை புலிகள் காப்பகம் பகுதிக்குட்பட்ட உலாந்தி டாப்சிலிப் வனசரகம் இப்பகுதிக்கு தமிழ்நாடு கேரளா மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை புரிந்து வந்தனர். தற்போது இப்பகுதியில் யானைகள் வளர்க்கும் முகாம் உள்ளது 28 யானைகள் பராமரிக்கப்பட்டு உள்ள பயணிகளை அழைத்துச் செல்வார்கள் ஆனால் மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதிகளில் புதிய குடியிருப்புகள் கட்டப்பட்டு வருவதால் சுற்றுலா பயணிகள் வளர்ப்பு யானைகள் பார்க்க அனுமதி இல்லை. மேலும் கடந்த ஐந்து வருடங்களாக யானை சவாரி இல்லாமல் உள்ளது . பொள்ளாச்சி தலைமை இடமாகக் கொண்டு இருக்கும் வனத்துறை அலுவலகத்தில் சுற்றுலா பயணிகள் நேரில் சென்று ரூம் செய்யச் சென்றால் எப்பொழுதும் ஆன்லைன் பிஸியாக உள்ளது என தெரிவித்து வனத்துறையினர் திருப்பி அனுப்பி விடுகின்றனர். இதனால் சுற்றுலா பயணிகள் மிகுந்த ஏமாற்றம் அடைந்து ஒரு நாள் சுற்றுலாவாக தங்களது கார்களில் டாப்சிலிப் செல்கின்றனர் ஆனால் பார்ப்பதற்கு ஒன்றும் இல்லாததால் அருகில் இருக்கும்
பரம்பிக்குளம் பகுதிக்கு சுற்றுலா பயணிகள் படையெடுக்கின்றனர். மேலும் ஆனைமலை புலிகள் காப்பகம் பகுதிகளில் தமிழ்நாடு டிராக் என்ற தனியார் நிர்வாகத்தின் மூலம் வனப் பகுதிக்கு அழைத்து செல்கின்றனர் அப்படி அழைத்துச் செல்லும் ஒவ்வொரு சுற்றுலா பயணிகளுக்கும் ரூபாய் 3800 வசூலிக்கப்படுகிறது. இது மட்டுமே ஆனைமலை புலிகள் காப்பகம் பகுதியில் செயல்பட்டு வருகிறது. ஆனைமலை புலிகள் காப்பகம் கள துணை இயக்குனர் மற்றும் ஆறு வனசரகர்கள் இருந்தும் சுற்றுலா தளம் மேம்படுத்த முடியாத சூழ்நிலை உள்ளது விடுமுறை நாட்கள் என்பதால் விஐபிகளுக்கு மட்டும் முன்னுரிமை அளிக்கப்பட்டு தங்கும் விடுதிகள் தரப்படுகிறது குறிப்பிடத்தக்கது, பொதுமக்கள் திருப்பி அனுப்பப்படுகின்றன. ஏமாற்றம் அடைந்த சுற்றுலா பயணிகள் வேற வழியில்லாமல் பரம்பிக்குளம் செல்லும் சூழ்நிலை உள்ளது தமிழக முதல்வர் மற்றும் வனத்துறை அமைச்சர் சுற்றுலா தளத்தை மேம்படுத்த விதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.