Skip to content

பாதுகாப்பான தமிழகம் படைத்தே தீருவோம்… விஜய் கடிதம்..

  • by Authour

அண்ணா பல்கலைக்கழக சம்பவத்தை தொடர்ந்து, அன்பு தங்கைகளே என குறிப்பிட்டு,தமிழக வெற்றிக்கழக  தலைவர் நடிகர் விஜய்  ஒரு  கடிதம் எழுதியுள்ளார். அதில்   கூறியிருப்பதாவது:

கல்வி  வளாகம் முதற்கொண்டு ஒவ்வொரு நாளும் தமிழகத்தில் தாய்மார்கள் , என்னருமை தங்கைகள், பெண் குழந்தைகள் என அனைத்து  தரப்பு பெண்களுக்கும் எதிராக நடக்கும் சமூக  அவலங்கள், சட்டம் ஒழுங்கு சீர்கேடு அவலங்கள், பாலியல் குற்றங்கள் என்று   பல்வேறு  வன்கொடுமைகளைக் கண்டு உங்கள் அண்ணனாக மன அழுத்தத்திற்கும்  சொலலொணா  வேதனைக்கும் ஆளாகிறேன்.

யாரிடம் உங்கள் பாதுகாப்பை கேட்பது? நம்மை ஆளும் ஆட்சியாளர்களை எத்தனை முறை கேட்டாலும் எந்த பயனுமில்லை என்பது தெரிந்ததே ,அதற்காகவே இக் கடிதம்.

எல்லா சூழல்களிலும்  நிச்சயம் உங்களுடன்  நான் உறுதியாக  நிற்பேன். அண்ணனாகவும், அரணாகவும். எனவே எதைப்பற்றியும் கவலை கொள்ளாமல்  கல்வியில் கவனம் செலுத்துங்கள்.  பாதுகாப்பான தமிழகத்தை படைத்தே தீருவோம். அதற்கான உத்தரவாதத்தை நாம் அனைவரும் இணைந்தே விரைவில் சாத்தியப்படுத்துவோம்.

உங்கள் அண்ணன், பிரியமுடன் விஜய்.

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

error: Content is protected !!