தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி கே வாசனின் அறுபதாவது பிறந்த நாளை முன்னிட்டு தஞ்சை மாவட்டம், பாபநாசத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.தஞ்சை மேற்கு மாவட்ட தலைவர் சேகர் தலைமை வகித்தார். பாபநாசம் தொகுதி பொறுப்பாளர் சேதுராமன், மாவட்ட துணைத் தலைவர்கள் மாஸ்கோ, ரமேஷ், பாபநாசம் வடக்கு வட்டாரத் தலைவர் விவேக், மாவட்ட இளைஞரணித் தலைவர் செந்தில்குமார், மாவட்ட பொதுச் செயலர் பாஸ்கர், முருகையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் 500 பேருக்கு வேட்டி, புடவை உள்ளிட்ட நலத் திட்ட உதவி வழங்கப்பட்டது. இதில் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் உள்ளிக் கடை ஜெயக்குமார், ஆதனூர் காமராஜ், ரவிச்சந்திரன், சம்பத் சார்பு அணி நிர்வாகிகள் முருகராஜ், கருண் சுகன்யா, முருகவேல் சுரேந்தர் பிச்சை, அறிவானந்தம், மணிவண்ணன், சரவணன், மாவட்டச் செயலர் சரவணன், முன்னாள் செயற் குழு உறுப்பினர் சேகர், இளைஞர் அணி நிர்வாகிகள் விஜய், பாலமுருகன், ராஜேஷ், ரமேஷ், ராஜ் உட்பட பலர் கலந்துக் கொண்டனர். பாபநாசம் நகரத் தலைவர் பக்ருதீன் அலி அகமது நன்றி கூறினார்.