Skip to content
Home » அரசு பஸ் மோதி அக்கா- தம்பி பலி…..மயிலாடுதுறையில் பரிதாபம்..

அரசு பஸ் மோதி அக்கா- தம்பி பலி…..மயிலாடுதுறையில் பரிதாபம்..

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா எடுத்துக்கட்டி கிராமத்தை சேர்ந்த அந்தோணி விக்டர்ராஜ் என்பவரின் மகள்கள் இரட்டை சகோதரிகளான பியூலா ஹான்சி(14), பியூலா நான்சி(14) ஆகிய இருவரும் திருக்களாச்சேரி ஹமீதியா உயர்நிலைப்பள்ளியில் 10-ஆம் வகுப்பும், மகன் அந்தோணி விக்ரந்த் ராஜ்(12) அதே பள்ளியில் 7-ஆம் வகுப்பும் படித்து வந்தார். மாணவிகள் இருவரும் கால்பந்து விளையாட்டு வீரர்கள், அடுத்த மாதம் மாநில அளவில் நடைபெறவுள்ள கால்பந்தாட்ட போட்டியில் மாணவிகள் பங்குபெறுவதற்காக 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள காட்டுச்சேரி விளையாட்டு மைதானத்திற்கு சென்று கால்பந்தாட்ட பயிற்சியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் கடந்த 24ஆம்தேதி காலை வீட்டிலிருந்து மாணவிகள் இருவரும் தம்பியுடன் காட்டுச்சேரி விளையாட்டு மைதானத்திற்கு ஸ்கூட்டி இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். இருசக்கர வாகனத்தை அந்தோனி விக்ரந்த்ராஜ் ஒட்டி சென்றுள்ளார். அப்போது சங்கரன்பந்தலில் இருந்து பொறையார் செல்லும் சாலையில் சென்றபோது காராம்பள்ளம் அருகே திருப்பத்தில் எதிரே வந்த அரசு பேருந்து எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இந்த விபத்தில் பியூலா ஹான்சிக்கு நெற்றியில் லேசான காயம் ஏற்பட்டு உயிர்தப்பிய நிலையில் பியூலா நான்சி தலை மற்றும் நெற்றியில் அடிபட்டு உயிரிழந்தார். இருசக்கர வாகனத்தை ஒட்டி வந்த அந்தோணி விக்ரந்த்ராஜிக்கு இரண்டு கால்களிலும் எலும்பு முறிவு ஏற்பட்டு ஆபத்தான நிலையில் தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 3 பேரில் 1 மகள் உயிரிழந்த நிலையில் மகனும் உயிரிழந்தது கிராமமக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.