இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 4வது மற்றும் பாக்சிங் டே கிரிக்கெட் மெல்போர்ன் நகரில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் செய்தது. நேற்று ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 311 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து 2ம் நாளான இன்றும் ஆஸ்திரேலியா பேட்டிங் செய்து 474 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
அதனைத் தொடர்ந்து இந்தியா பேட்டிங் செய்தது. ரோகித் சர்மா 3 ரன்களில்ஆட்டம் இழந்தார். ஜெய்ஸ்வால் 82 ரன்கள் எடுத்து ஓரளவு தாக்குப்பிடித்தார். கோலி 36, ஆகாஷ் தீப் 0, கே. எல். ராகுல் 24 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்கள்.
2ம் நாள் ஆட்ட நேர முடிவில் ஜடேஜா4, பண்ட் 6 ரன்களுடன் ஆடிக்கொண்டிருந்தனர். இந்த போட்டியிலும் இந்திய வீரர்கள் சோபிக்கவில்லை. நாளை 3ம் நாள் போட்டி நடக்கிறது.