Skip to content
Home » போதை பொருள் விற்பனை வழக்கில் 6,042 பேர் கைது…..திருச்சி மண்டலத்தில் போலீசார் அதிரடி…

போதை பொருள் விற்பனை வழக்கில் 6,042 பேர் கைது…..திருச்சி மண்டலத்தில் போலீசார் அதிரடி…

  • by Authour

திருச்சி, மத்திய மண்டலத்தில்,இந்த ஆண்டில் கஞ்சா மற்றும் போதைப்பொருள்கள் தொடர்புடைய வழக்குகளில் 6,042 பேர் கைது செய்யப்பட்டு 2, 558 கிலோ கஞ்சா உள்பட 26,208 கிலோ புகையிலை போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் போதைப்பொருள்கள் நடமாட்டத்தை குறைக்கவும், குறிப்பாக பள்ளி கல்லூரிகளில் பயின்று வரும் இளையோரிடம் ஏற்பட்டுள்ள போதைப்பொருள்கள் பழக்க வழக்கத்தை முற்றிலும் தடுக்கவும் காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். இவை தொடர்பாக, பொது இடங்களிலும், கல்லூரி மற்றும் பள்ளிகளிலும் கஞ்சா மற்றும் புகையிலை, குட்கா போதை பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. திருச்சி மத்திய மண்டல காவல்துறைத் தலைவர் ஜி. கார்த்திகேயன் உத்தரவின் பேரில், மத்திய மண்டலத்தில் உள்ள 10க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் காவல்துறை சார்பில் விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. மேலும் மாவட்ட ஆட்சியர், மாவட்ட கல்வி அலுவலர், அனைத்து கல்லூரி மற்றும் பள்ளி முதல்வர்கள், தலைமை ஆசிரியர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களுடன் இணைந்து மத்திய மண்டல காவல்துறை சார்பில் கடந்தாண்டை (2023}ல் 13,622 நிகழ்ச்சிகள்) விட நிகழாண்டில் கூடுதலாக, 27,315 விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. மேலும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் காவல்துறை மற்றும் பல்வேறு பொதுநல அமைப்பினருடன் இணைந்து விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டமும் நடத்தப்பட்டுள்ளது.

அந்த வகையில் காவல்துறை நடவடிக்கையும் குறைவில்லை. மத்திய மண்டல மாவட்டங்களில் கஞ்சா மற்றும் தடைசெய்யப்பட்ட போதை பொருள்கள் விற்பனை செய்த நபர்கள் மீது 2023 ஆம் ஆண்டு மொத்தம் 861 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டு, 1236 பேர் கைது செய்யபட்டனர். ஆனால் நிகழாண்டில் (2024 ) திருச்சியில் }103, புதுக்கோட்டை}122, கரூர்}142, பெரம்பலூர்}68, அரியலூர்}38, தஞ்சாவூர்}235, திருவாரூர்}204, நாகப்பட்டினம்}56, மயிலாடுதுறையில் }239 வழக்குகள் என, மத்திய மண்டலத்தில் மொத்தம் 1,207 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அதன்மூலம் மொத்தம் 1,662 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் அவர்களிடமிருந்து திருச்சியில் }78 கிலோ, புதுக்கோட்டை} 459, கரூர்}30, பெரம்பலூர்}146, அரியலூர்}7, தஞ்சாவூர்}1024, திருவாரூர்}65, நாகப்பட்டினம்}717 மற்றும் மயிலாடுதுறை}32 கிலோ என மொத்தம் 2,558 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவை தவிர போதை மாத்திரைகள், பவுடர்கள், ஊசி மருந்துகள் சுமார் 5 கிலோ பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.போதை பொருள்கள் விநியோகத்துக்குப் பயன்படுத்திய வகையில் மொத்தம் 139 வாகனங்கள் போலீஸôரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

அதேபோல் நிகழாண்டில் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்த நபர்கள் மீது திருச்சியில்}391, புதுக்கோட்டை}524, கரூர்}392, பெரம்பலூர்}314, அரியலூர்}335, தஞ்சாவூர்}891, திருவாரூர்}835, நாகப்பட்டினம்}170 மற்றும் மயிலாடுதுறை}374யில் வழக்குகள் என மொத்தம் 4,226 வழக்குகள் பதிவு செய்து 4,380 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 23,650 கிலோ அளவிலான புகையிலைப் பொதைப்பொருள்களும் 151 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஆக மொத்தம் கஞ்சா மற்றும் புகையிலைப்பொருள்கள் தொடர்பான வழக்கில் மத்திய மண்டலத்தில் நிகழாண்டில் மொத்தம் 6,042 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து கஞ்சா மற்றும் புகையிலைப் போதைப்பொருள்கள் மொத்தம் 26,208 கிலோ மற்றும் 290 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதில் கைதானவர்களில், தொடர்ந்து கஞ்சா, தடைசெய்யப்பட்ட போதை பொருட்கள் மற்றும் குட்கா போன்ற பொருட்களை விற்பனை செய்தல் மற்றும் கடத்தல் செய்த வகையில், திருச்சியில் }5, புதுக்கோட்டை}1, கரூர்}1, பெரம்பலூர்}14, அரியலூர்}2, தஞ்சாவூர்}17, திருவாரூர்}12, நாகப்பட்டினம்}2 மற்றும் மயிலாடுதுறையில் }3 பேர் என மொத்தம் 57 பேரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இத்தகவலை மத்திய மண்டல காவல்துறை தெரிவித்துள்ளது.