Skip to content
Home » காஷ்மீர் இல்லாத இந்தியா.. காங்.,பேனரால் பரபரப்பு

காஷ்மீர் இல்லாத இந்தியா.. காங்.,பேனரால் பரபரப்பு

கர்நாடக மாநிலத்தில் முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது இங்கு உள்ள பெலகாவியில் 1924 டிசம்பரில் மகாத்மா காந்தி தலைமையில் காங்கிரஸ் மாநாடு நடந்தது. இந்த மாநாட்டில் அவர் முதன்முறையாக காங்கிரஸ் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பெலகாவி மாநாட்டின் நுாற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு, கர்நாடக காங்கிரஸ் தலைவரும், துணை முதல்வருமான சிவகுமார் தலைமையில் இரண்டு நாட்கள் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அத்துடன், காங்., தேசிய செயற்குழுக் கூட்டமும் நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் தேசிய தலைவர் கார்கே, லோக்சபா எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்.பியுமான ராகுல் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்கின்றனர். கட்சியின் குறுகிய கால மற்றும் நீண்ட கால இலக்குகள் குறித்து இந்த செயற்குழுவில் விவாதிக்கப்பட்டது. இந்நிலையில், காங்கிரஸ் தலைவர்களை வரவேற்க கட்சியினர் சார்பில் சாலைகளில் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. அதில் காஷ்மீரின் சில பகுதிகள் நீக்கப்பட்ட இந்திய வரைபடத்தை பயன்படுத்தியுள்ளனர்.