விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி. கோவையில் இன்று அளித்த பேட்டி… “அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் அண்ணாமலை செய்வது ஆதாய அரசியல். அண்ணாமலை லண்டன் சென்று வந்த பிறகு என்ன ஆனது எனத் தெரியவில்லை. காந்தியடிகள் போல அகிம்சை வழியை கையில் எடுக்கிறாரா எனத் தெரியவில்லை; காந்தியடிகளே இவ்வாறு செய்ய மாட்டார். அண்ணாமலையின் சாட்டையடி போராட்டம் நகைப்புக்குரியதாக மாறிவிடக் கூடாது.தன்னைத் தானே வருத்திக் கொள்ளும் அண்ணாமலையின் போராட்டம் அதிர்ச்சி அளிக்கிறது. தன்னைத்தானே சாட்டையால் அடித்துக் கொள்ளும் போராட்டம் தேவையற்றது.அதிமுக எதிர்க்கட்சி அல்ல; பாஜக தான் எதிர்க்கட்சி என காட்டிக்கொள்ள அண்ணாமலை முயல்கிறார். பரபரப்பான அரசியலை செய்ய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விரும்புகிறார்.ஆளுங்கட்சி மீது குற்றச்சாட்டு வைத்தால்தான் எதிர்க்கட்சியாக இருக்க முடியும் என அண்ணாமலை நினைக்கிறார்,”இவ்வாறு தெரிவித்தார்.