Skip to content
Home » பிறந்தநாள்…. ஏரியில் மூழ்கி உயிரிழந்த பள்ளி மாணவர்…. பரிதாபம்….

பிறந்தநாள்…. ஏரியில் மூழ்கி உயிரிழந்த பள்ளி மாணவர்…. பரிதாபம்….

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள காமராஜபுரம் பகுதியைச் சேர்ந்த சுரேந்திரபூபதி, மகன் நகுலன் (16) என்பவர் ஜெயங்கொண்டம் அரசு மேல்நிலை பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வருகிறார். நகுலனுக்கு 25.12.24 இன்று பிறந்த நாளை முன்னிட்டு பிறந்த நாளை கொண்டாடும் விதமாக கொம்மேடு செல்லும் பாதையில் பிள்ளைஏரியில் சக மாணவர்களுடன் குளித்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அபபோது எதிர்பாராத விதமாக நீச்சல் தெரியாத நகுலன் தண்ணீரில் மூழ்கி உள்ளார். இதனை சற்றும் எதிர்பாராத சக மாணவர்கள் அவரைப் பிடித்து இழுத்து காப்பாற்ற முயற்சித்துள்ளனர். இருப்பினும் மாணவனை காப்பாற்ற முடியவில்லை. இதனால் சக மாணவர்கள் செய்வதறியாது சத்தம் போடவே அக்கம் பக்கத்தில்

இருந்தவர்கள் ஓடிவந்து தேடி பார்த்து உள்ளனர். ஏரியில் அனைத்து இடங்களிலும் தேடியும் கிடைக்காத நிலையில் இது குறித்து ஜெயங்கொண்டம் போலீசாருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். விரைந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு துறையினர் பொதுமக்கள் உதவியுடன் நகுலனின் உடலை மீட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.