Skip to content
Home » மேட்டூர் அணை டிசம்பரில் நிரம்புமா?

மேட்டூர் அணை டிசம்பரில் நிரம்புமா?

டெல்டா மாவட்டங்களின் விவசாயம் மற்றும் குடிநீருக்கு ஆதாரமான மேட்டூர் அணையின் மொத்த உயரம் 120 அடி.   அதன் கொள்ளளவு 93.470 எம்சி. இன்று காலை 8 மணி நிரவரப்படி அணையில் 119.53 அடி தண்ணீர் உள்ளது.  அணைக்கு வினாடிக்கு 2,331 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து   503 கனஅடி தண்ணீர்  காவிரியில் திறக்கப்படுகிறது. இது தவிர அணையின் கிழக்கு , மேற்கு  கால்வாய்களிலும் பாசனத்திற்கு திறக்கப்பட்டுள்ளது.

இன்னும் 0.746அடி தண்ணீர் வந்தால்  அணை நிரம்பி விடும்.  எனவே அணை  இன்று அல்லது நாளை நிரம்பி விடும் என நினைக்கலாம். ஆனால் அணைக்கு இன்னும் 0.746 டிஎம்சி தண்ணீர் வந்தால் தான்  அணை நிரம்பும்.

இந்த 0.746 டிஎம்சி தண்ணீர் அணைக்கு கிடைக்க வேண்டுமானால், அணைக்கு வினாடிக்கு 9 ஆயிரம் கனஅடி வீதம்  24 மணி நேரம் தொடர்ந்து வரவேண்டும். அப்படி வந்தால் தான் 0.746 டிஎம்சி தண்ணீர் கிடைக்கும்.

எனவே இதே நிலையில் தண்ணீர் தொடர்ந்து வந்து கொண்டு இருந்தால் 30ம் தேதி வாக்கில் அணை நிரம்ப வாய்ப்பு உள்ளது. இதில் ஏற்ற இறக்கங்கள் இருந்தால் அதைப்பொறுத்து இந்த தேதிக்கு முன்னோ, பின்னரோ அணை நிரம்ப வாய்ப்பு உள்ளது.  அது வரை டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்காமல் இருந்தால் அணை டிசம்பரில் நிரம்பலாம்.  ஏற்கனவே  15 வருடங்களுக்கு முன்னர் டிசம்பரில் மேட்டூர் அணை நிரம்பி இருக்கிறது.