Skip to content
Home » மாணவிக்கு பாலியல் வன்கொடுமை, சென்னையில் அதிமுக ஆர்ப்பாட்டம்

மாணவிக்கு பாலியல் வன்கொடுமை, சென்னையில் அதிமுக ஆர்ப்பாட்டம்

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதைக் கண்டித்து,  அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் பல்கலைக்கழகத்தின் பிரதான வாயில் முன்பாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினரை போலீஸார் கைது செய்தனர். அதைத்தொடர்ந்து, அண்ணா பல்கலைக்கழகம் அமைந்துள்ள சர்தார் படேல் சாலையில்,  அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

நூற்றுக்கும் மேற்பட்ட அதிமுகவினர், அண்ணா பல்கலைக்கழகத்துக்கும், ஆளுநர் மாளிகைக்கும் இடையிலான சாலையை மறைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால், கிண்டி வழியாக அடையாறு செல்லும் சாலையில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. முன்னதாக, இன்று காலை முதலே ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள வந்த அதிமுகவினரை காவல்துறையினர் கைது செய்தனர். ஆர்ப்பாட்டத்தின் போது தமிழக அரசைக் கண்டித்து கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இதுபோல  பாஜக சார்பில் சென்னை வள்ளுவர்கோட்டத்தில்  ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் தமிழிசை, கரு நாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.