திருச்சியிலிருந்து இலங்கைக்கு உரிய அனுமதி இன்றி கடத்திச் செல்ல முயன்ற வெளிநாட்டு பணத்தாள்களை சுங்கத்துறையினர் நேற்று பறிமுதல் செய்தனர். திருச்சி விமான நிலையத்திலிருந்து இலங்கை தலைநகர் கொழும்புக்கு செவ்வாய்க்கிழமை செல்ல விருந்த ஸ்ரீலங்கன் விமானம் புறப்படத் தயாராக நின்றிருந்தது. அந்த விமானத்தில் செல்ல விருந்த பயணிகளையும், அவர்களது உடைமைகளையும் சுங்கத்துறை வான் நுண்ணறிவுப் பிரிவினர், வழக்கமான சோதனைகளுக்கு உள்ளாக்கினர். இதில் பயணி ஒருவர், உரிய அனுமதியின்றி ஆஸ்திரேலியா நாட்டு பணத்தாள்களை (8000 ஆஸ்திரேலியன் டாலர்) உடைமைகளுக்குள் மறைத்து கடத்திச் செல்ல முயன்றது தெரிய வந்தது. கடத்திச் செல்ல முயன்ற வெளிநாட்டு பணத்தாள்களின் மதிப்பு ரூ. 4. 36 லட்சமாகும். இதனையடுத்து அந்த பணத்தாள்களை சுங்கத்துறையினர் நேற்று பறிமுதல் செய்து அவரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.