நகைக்கடையில் திருட்டு
திருச்சி என்எஸ் பி சாலையில் பிரபல நகைக்கடை உள்ளது. இந்த கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்தவர்கள் அண்ணா நகரை சேர்ந்த சுகன்யா (வயது 22) பெட்டவாய்த்தலை சேர்ந்த கார்த்திக் (21), அனார்கலி (28) ஆகிய மூன்று பேர் வேலை பார்த்து வந்தனர். இந்நிலையில் மேற்கண்ட நகை கடையில் இருந்த 5 பவுன் நகையை மூன்று பேர் திருடிவிட்டனர். இதனை கண்டுபிடித்த அந்த கடையில் மேலாளர் பிரசன்ன குமார் கோட்டை குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மேற்கண்ட மூன்று பேரையும் பிடித்து விசாரணை செய்தனர். அப்போது கடையில் இருந்த ஐந்து பவுன் நகையை திருடியத்தை ஒப்புக்கொண்டனர்.இதையடுத்து கோட்டை குற்றப்பிரிவு போலீசார் மூன்று பேரை கைது செய்துள்ளனர்.
செல்போன் திருடியவர் கைது
திருச்சி புத்தூர் மாருதி நகர் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் கரூர் மாவட்டம் குளித்தலை சேர்ந்த ராஜு (65)என்பவர் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார்.இந்த நிலையில் இவர் பணியில் இருந்த போதுஇரவு திடீரென்று லேசாக தூங்கிவிட்டார். இந்த நிலையில் மர்ம ஆசாமி ஒருவர் ராஜு சட்டை பாக்கெட்டில் இருந்த செல்போனை தேடிக்கொண்டு ஓடிவிட்டார்.இது தொடர்பாக ராஜு அரசு மருத்துவமனை போலீசில் புகார் கொடுத்தார்.புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த பகுதியில் சுற்றி திரிந்த வாலிபர் ஒருவரை பிடித்து விசாரணை செய்தபோது அவர்தான் செல்போனை திருடியது தெரிய வந்தது.இதைத்தொடர்ந்து அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்திய போது பாலக்கரை கூனி பஜாரை சேர்ந்த அப்துல் காதர் (23)என்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அப்துல் காதரை கைது செய்தனர்.
போதை மாத்திரை சப்ளை ரவுடி கைது
திருச்சி பெரிய மிளகு பாறை பொதுத்தேர்வு பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார் இவரது மகனுக்கு திருச்சி பொன் நகர் புது செல்வநகர் பகுதியைச் சேர்ந்த ரவுடி செல்வம் என்கிற வல்லரசு (35)என்பவர் போதை மாத்திரை விநியோகம் செய்தார்.
இதை அறிந்து அந்த வாலிபரின் தாயார் ராஜேஸ்வரி அதிர்ச்சி அடைந்தார். பின்னர் இது குறித்து செசன்ஸ்கோர்ட் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் ரவுடி வல்லரசை கைது செய்தனர் பின்னர் அவரிடமிருந்து 10 போதை மாத்திரைகள் ரூபாய் 5 ஆயிரத்து 900 ரொக்க பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.