மக்களவையில் இன்று 2022-2023ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் குறித்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார். மத்திய அரசின் பட்ஜெட் ஏமாற்றம் அளிக்கிறது என்று தெரிவித்துள்ள அவர், தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்களை மட்டுமே குறி வைத்து பட்ஜெட்டில் சலுகைககள் அறிவிக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ளார்.
மேலும், பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள தனி நபர் வருமான வரியில் மாற்றம், 157 புதிய நர்சிங் கல்லூரிகள் திறப்பு ஆகியவை வரவேற்கத்தக்கதாக இருந்தாலும், மாநிலங்களின் நிதி சுதந்திரத்திற்கு ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எதுவும் இல்லை. மதுரை எய்மஸ் கட்டுமான பணிக்கு கூட நிதி ஒதுக்கீடு செய்யாதது வருத்தமளிக்கிறது. தமிழ்நாட்டுக்கு புதிய திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை. மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி இழப்பீடு வழங்குவது மேலும் 2 ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும் என்ற கோரிக்கை ஏற்கப்படவில்லை என்று முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.