Skip to content
Home » பெரியாரின் 51வது நினைவு தினம், முதல்வர் மரியாதை

பெரியாரின் 51வது நினைவு தினம், முதல்வர் மரியாதை

  • by Authour

தந்தை பெரியாரின்  51வது நினைவு தினம்  இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. இதையொட்டி சென்னை அண்ணா சாலையில் உள்ள  பெரியார் சிலையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுக முன்னணியினர்  மலர் தூவி மரியாதை செலுத்தினர். பெரியார் சிலை பீடத்தில் பெரியாரின் உருவப்படம் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. இதில் முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி,   அமைச்சர்கள்  துரைமுருகன், சேகர்பாபு, மேயர் பிரியா,   எம்.பிக்கள் கனிமொழி, ராசா  உள்பட திமுக நிர்வாகிகள் திரளாக  பங்கேற்று பெரியாருக்கு மரியாதை செலுத்தினர்.

பின்னர் முதல்வர் பெரியார் திடலுக்கு சென்று பெரியாரின்  புதிய எணினி நூலகத்தையும் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில்   திக தலைவர் வீரமணி மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றனர்.