Skip to content
Home » காவேரி ஆற்றில் மூழ்கிய 3 திருச்சி ஆர்.சி பள்ளி மாணவர்கள்…

காவேரி ஆற்றில் மூழ்கிய 3 திருச்சி ஆர்.சி பள்ளி மாணவர்கள்…

  • by Authour

திருச்சி ஜங்ஷன் பகுதியில் உள்ள ஆர்.சி மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வரும் மாணவர்களில் 10 பேர் நேற்று மதியம் ஒரு மணி அளவில் அரையாண்டு இறுதி தேர்வை முடித்து விட்டு வீட்டுக்கு சென்று உடைகளை மாற்றி விட்டு காவேரி ஆற்றில் குளிக்க சென்றனர். குடமுருட்டி பகுதியில் காவிரி ஆற்றின் அய்யாளம்மன் படித்துறையில் இறங்கிய அந்த 10 மாணவர்களும் படித்துறை பகுதியில் போதுமான அளவில் தண்ணீர் இல்லாததால் நீச்சல் அடிக்கும் ஆசையில் காவிரி ஆற்றின் மைய பகுதிக்கு சென்றனர். ஆனால் மைய பகுதியில் ஆற்றில் நீரோட்டத்தின் இழுப்பு சக்தி அதிகமாக இருந்ததால் அவர்களால் ஒன்றும் செய்ய முடியாமல் தவித்தனர். இதில் ஓரளவு நீச்சல் தெரிந்த 7 மாணவர்கள் தட்டுத்தடுமாறி நீச்சலடித்து கரை சேர்ந்தனர். ஆனால் நீர் சுழற்சியில் சிக்கிக்கொண்ட ஜாகீர் உசேன் (15), விக்னேஷ் (16), சிம்பு (16) ஆகிய 3 மாணவர்களும் கரை சேரவில்லை. அவர்கள் என்ன ஆனார்கள் என தெரியவில்லை. மாலை 6 மணி வரை தேடப்பட்ட நிலையில் வெளிச்சம் இல்லாத காரணமாக தேடும் பணிநிறுத்தப்பட்டது. இன்று காலை துவங்கி மாயமான மாணவர்களை தேடும் பணிகள் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.