Skip to content
Home » இன்றைய ராசிபலன்… (24.12.2024)

இன்றைய ராசிபலன்… (24.12.2024)

செவ்வாய்கிழமை (24.12.2024)

மேஷம்….

இன்றைய நாள் நீங்கள் விரும்பத்தக்கதாக இருக்கும். உங்கள் இலக்குகளை எளிதில் அடைவீர்கள். இன்று பயனுள்ள திட்டங்களை தீட்டுவீர்கள். அது உங்களுக்கு சாதகமான பலன்களைத் தரும். உங்கள் பணியில் சாதகமான பலன்கள் கிடைக்கும். அதிகப்படியான பண வரவு ஊக்கத்தொகையாக கிடைக்க வாய்ப்புள்ளது.

ரிஷபம்…. நீங்கள் இன்று வெளியிடங்களுக்கு செல்வீர்கள். அது உங்களுக்கு உதவியாகவும் ஆறுதலாகவும் இருக்கும். யதார்த்தமான அணுகுமுறை மேற்கொள்வது சிறந்தது. நீங்கள் இன்று கவனத்துடன் பணியாற்றுவீர்கள். உங்களை மேம்படுத்திக் கொள்ளும் வகையில் பணியாற்றுவீர்கள். இதனால் பணியில் தவறுகள் ஏற்படுவது குறையும்.

மிதுனம்… 

இன்றைய நாள் பயனுள்ளதாக இருக்காது. என்றாலும் வருத்தப்படுவதை குறைத்துக் கொண்டு, உங்களுக்கு விருப்பமான விஷயங்களுக்காக நேரத்தையும் திறமையையும் பயன்படுத்துங்கள். தியானப் பயிற்சி சிறந்தது. குழப்பங்களுக்கு இடம் கொடாமல் தெளிவாக எண்ண வேண்டும். உங்கள் நாளை திட்டமிட்டு பணியாற்றுங்கள். பணி நிமித்தமான பயணம் காணப்படுகின்றது. உங்கள் அன்றாட பணிகளுடன் வேறு பணிகளையும் ஆற்றுவீர்கள்.

கடகம்….இன்று தியானம் அல்லது பிரார்த்தனை மேற்கொள்வது மிகவும் அவசியம்.அதன் மூலம் எதிர்மறை எண்ணங்களை தவிர்க்கலாம்.மேலும் மனதில் உள்ள தேவையற்ற எண்ணங்களை நீக்கி அமைதி பெறலாம். நேர மேலாண்மை திறன் மூலம் இன்று வெற்றி காண்பீர்கள். சிறப்பாக திட்டமிட்டால் இன்று அனைத்தும் உங்களுக்கு சாதகமாக இருக்கும். வேலை அதிகமாக இருப்பதாக உணர்வீர்கள்.

சிம்மம் …இன்று முன்னேற்றகரமான நாளாக இருக்கும். முறையாக திட்டமிடுவதன் மூலம் வளர்ச்சி காணலாம். இன்று ஆற்றலும் உறுதியும் உங்களிடம் நிறைந்திருக்கும். நீங்கள் முக்கிய முடிவுகளை எடுக்கலாம். இன்று உங்கள் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். உங்களிடம் நம்பிக்கையான அணுகுமுறை காணப்படும். அது உங்கள் பணியில் வெளிப்படும்.

கன்னி….ஆன்மீக சொற்பொழிவுகள் கேட்டல் மற்றும் அடிக்கடி கோவிலுக்கு செல்வது மனதிற்கு ஆறுதல் தரும்.முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும். தியானம் மேற்கொள்வது சிறந்த பலனைத் தரும். செயல்களை திட்டமிட வேண்டும் மற்றும் அதன்படி முடிக்க வேண்டும். அப்பொழுதான் அவை உங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும், தேவையற்ற செயல்கள் செய்வதை தவிர்க்க முடியும்.

துலாம்…  உங்கள் இலக்குகளை அடைவதில் தடைகள் காணப்பட்டாலும் உங்கள் மன தைரியம் மற்றும் உறுதி மூலம் வெற்றி பெறுவீர்கள். பாதைகள் கடினமாக இருந்தாலும் பலன்கள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். அமைதியாக இருங்கள். வெற்றி நிச்சயம். உங்கள் கடின உழைப்பு இன்று உங்களை வெற்றி பெற்ற மனிதனாக்கும். அதிர்ஷ்டத்தை நம்பாமல் உழைப்பை நம்புங்கள். இன்று வேலை அதிகமாக காணப்படும். அதனை நீங்கள் சிறப்பான திட்டத்துடனும் உறுதியுடனும் எதிர்கொள்வீர்கள்.

விருச்சிகம்….இன்று இனிமையான சாதகமான நாள். இன்று நல்ல பலன்களைக் காண்பீர்கள். இன்றைய நாளை முறையாக திட்டமிடவும். முக்கிய முடிவுகளை எடுக்கலாம். நீங்கள்எந்தப் பணி செய்தாலும் அதில் இன்று வெற்றி கானபீர்கள். உங்கள் பணியைக் கண்டு உங்கள் மேலதிகாரிகள் பாராட்டுவார்கள்.

தனுசு …

இன்று உங்களுக்கு சிறப்பான நாள். உங்கள் அக்கம் பக்கத்தவரின் ஆதரவு கிடைக்கும். இன்று அனைத்தும் சிறப்பாக நடக்கும். இன்று நல்ல பலன்கள் கிடைக்கும். உங்கள் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். அவர்கள் உங்களை பாராட்டுவார்கள். உங்கள் கடின உழைப்பு மற்றும் திறமை வெளிச்சத்திற்கு வரும்.

மகரம்….

இன்று இறை வழிபாட்டில் ஈடுபடுங்கள். முக்கிய முடிவுகள் எடுப்பதை வேறு ஒரு நாளைக்கு தள்ளிப்போடுங்கள். பணியிடத்தில் திட்டமிட்டு வேலை செய்தால் பலன் கிடைக்கும். உங்களின் நேர்மறையான அணுகுமுறை காரணமாக அதிகப் பணிகளையும் எளிதாக கையாள்வீர்கள்.

கும்பம்…. இன்று சிறப்பான பலன்கள் கிடைக்காது. என்றாலும் அமைதியாக செயல்களை கையாண்டால் சரியாக செயலாற்றலாம். செயல்களை பொறுமையுடன் கையாளுங்கள். இன்று முன் கூட்டியே திட்டமிடலும் அதன்படி நடந்து கொள்வதும் கடினமாக இருக்கும். பணிகளை சரியான விதத்தில் கையாண்டால் சுமை குறைவாகத் தெரியும்.

மீனம் …..நீங்கள் இன்று உணர்ச்சிப்பூர்வமான அணுகுமுறை மேற்கொள்வீர்கள். விரைந்து முடிவெடுக்காதீர்கள். சூழ்நிலைக்கு தக்கவாறு நடந்து கொள்ளுங்கள். ஆன்மீகத்தில் நாட்டம் கொள்வதன் மூலம் விஷயங்களை எளிதாகக் கையாளலாம். இன்று பணிகள் அதிகமாக இருப்பதாக உணர்வீர்கள். அதனை மனதில் கொண்டு வருத்திக்கொள்ளதீர்கள். விரைவாகவும் எளிதாகவும் பணியாற்றுவதைப் பற்றி சிந்திக்க முயலுங்கள்.