தஞ்சாவூர் அருகே நேற்று முன்தினம் தாலுகா போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தஞ்சாவூர் -நாகை சாலை சமுத்திரம் ஏரி அருகில் ஒரு லாரியை மறித்து போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது அதில் உரிமம் மற்றும் எவ்வித ஆவணங்களும் இன்றி எம் சாண்ட் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர் உக்கடை பகுதியை சேர்ந்த பாலுசாமி என்பவரின் மகன் மகேஸ்வரனை (25) கைது செய்தனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட லாரியும் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக லாரி உரிமையாளர் மஞ்சுளா என்பவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.