ஊழியர் மயங்கி சாவு….
தஞ்சை மாவட்டம், பாபநாசம், சூலமங்கலத்தைச் சேர்ந்தவர் ஆனந்தராஜ் (39), இவர் திருச்சி இ.பி. ரோட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில்ஊழியராக வேலை செய்து வந்தார். இந்நிலையில் இவர் நேற்று வேலை செய்துகொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்தார். அருகில் இருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்ந்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஆனந்தராஜ் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து அவரது தந்தை பழனியையா அளித்த புகாரின் பேரில் கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
பள்ளி மாணவன் தூக்கிட்டு தற்கொலை…
திருச்சி தென்னுார், காஜாதோப்பைச் சேர்ந்தவர் முகமது ஓவாயிஸ். இவரது சகோதரர் முகமது பயாஸ் ரஹ்மான் (வயது 15) இவர் பீமநகர் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 10- வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் இவர் தன் படிப்பில் சரியாக கவனம் செலுத்தவில்லை என்றும். இதனால் இவரது பெற்றோர் இவரை கண்டித்ததாக கூறப்படுகிறது. இதில் மனம் உடைந்த மாணவன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது புகாரின் பேரில் தில்லைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அடையாளம் தெரியாத ஆண் சடலம்..
திருச்சி, குளுமிக்கரை, தொட்டி பாலம் அருகே அடையாலம் தெரியாத 40 வயது மதிக்கத்தக்க ஒரு ஆண் சடலம் நீரில் இடப்பதாக திருச்சி அரசு மருத்துவமனை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் போலீசார் அங்கு சென்று உடலை கைப்பற்றி திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இறந்தவர் யார் என்பது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஸ்ரீரங்கத்தில் அனுமதியின்றி மணல் அள்ளிய வாலிபர் கைது
ஸ்ரீரங்கம், வீரேஸ்வரம், பாம்லம்மன் கோவில் படித்துறை அருகே மணல் அள்ளுவதாக திருவரங்கம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் போலீசார் அங்கு சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு உரிய அனுமதி மற்றும் ஆவணங்கள் பெறாமல் மணல் அள்ளிய திருவரங்கம், ஸ்ரீனிவாசநகரைச் சேர்ந்த அதியமான் (வயது38) என்பவரை திருவரங்கம் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர் அள்ளிய 3 மூட்டை மணல் மற்றும் மொப்பட் பறிமுதல் செய்யப்பட்டது.
திருச்சி மத்திய சிறையில் கைதியிடம் கஞ்சா விநியோகம்..
மதுரை மாவட்டம், திடீர் நகரைச் சேர்ந்தவர் வட்ட சூரியா (வயது27), இவர் திருச்சி பெட்டவாய்த்தலையில் ஈடுபட்ட குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் ஆகஸ்ட் மாதம் முதல் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இவரிடம் மத்திய சிறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.அப்பொழுதுசூர்யா கஞ்சாமறைத்து வைத்திருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர் பிறகு அந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து கேகே நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் விசாரணையில் வட்ட சூரியாவிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்பொழுது அவர் திருச்சி மத்திய சிறையைச் சேர்ந்த சிறை வார்டன் ஒருவரிடம் இருந்து கஞ்சாவை வாங்கியதாக அதிர்ச்சி தகவல் கூறினார்.இதை யடுத்து போலீசார் சூர்யாவிற்கு கஞ்சா விநியோகம் செய்த சிறை வார்டன் யார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் திருச்சி மத்திய சிறை வார்டன் எழில் ராஜ் என்பவரிடம் இருந்து கஞ்சா வாங்கியதை
உறுதி செய்தனர். இதையடுத்து போலீசார் சூர்யா மற்றும் சிறை வார்டன் எழில் ராஜ் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
திருச்சி மத்திய சிறையில் இருக்கும் கைதுக்கு சிறைவார்டன் கஞ்சா விநியோகம் செய்து இருப்பது திருச்சி மத்திய சிறை காவலர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் குறித்து கே.கே.நகர் போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து நடத்தி வருகின்றனர்.
கஞ்சா விற்ற 6 பேர் கைது…
ஸ்ரீரங்கம், ஓம் சக்தி கோவில் அருகே கஞ்சா விற்பனை நடப்பதாக திருவரங்கம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் போலீசார் அங்கு சோதனை மேற்கொண்டனர். அப்பொழுது ஸ்ரீரங்கம் வெள்ளிக்கிழமை சாலையைச் சேர்ந்த சங்கர் (25) என்பவரை கஞ்சா விற்றது தெரியவந்தது. இதேபோல் திருவரங்கம் புலிமண்டபம் அருகே கஞ்சா விற்ற திருவரங்கம் மங்கம்மாநகரைச் சேர்ந்த குமார் (வயது21) மற்றும் வெள்ளிக்கிழமை சாலையைச் சேர்ந்த மோகன் ராஜ் (21) ஆகிய 3 பேரை திருவரங்கம் போலீசார் கைது செய்தனர். இதேபோல் இ.பி. சாலை பூலோகநாதர் கோவில் அருகே கஞ்சா விற்ற அதே பகுதியைச் சேர்ந்த பிரசாந்த் (25) என்பவரை கோட்டை போலீசார் கைது செய்தனர். இதேபோல் திருச்சி பிராட்டியூர் சாலை அருகே முற்புதரில் கஞ்சா விற்ற ராம்ஜி நகர், கே.கள்ளிக்குடியைச் சேர்ந்த அஷோக் குமார் ( 65), கருமண்டபம், கோரையாற்றுக்கரை அருகே கஞ்சா விற்ற ராம்ஜி நகர் மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த கருணமூர்த்தி ( 48) என்பவரை மது விலக்க அமலாக்கப்பிரிவு போலீசார் கைது செய்தனர். மேலும் ராம்ஜி நகர் மில் காலனியில் கஞ்சா விற்ற ஜெய் (எ) ஜானிகிராமன் என்பவர் மீது எ.புதுார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
போலி பாஸ்போர்ட்டில்கோலாலம்பூரிலிருந்து திருச்சி வந்த பயணி கைது.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி, சேவலுாரைச் சேர்ந்தவர் வடிவேல் (வயது40), இவர் சம்பவத்தன்று கோலாலம்பூரில் இருந்து திருச்சி சர்வதேச விமான நிலையம் வந்தார். அங்கு சுங்கத்துறை பிரிவு அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் வடிவேல் போலி ஆவணங்கள் சமர்ப்பித்து பிறந்த தேதி மற்றும் பிறந்த ஊரை மாற்றி கொடுத்து போலி பாஸ்போர்ட் பெற்றது தெரியவந்தது. இது குறித்து சுங்கத்துறை பிரிவு அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் ஏர்போர்ட் போலீசார் வழக்கு பதிந்து வடிவேலை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.