Skip to content
Home » த.வெ.க கொடி… நேற்று இறக்கம்… இன்று ஏற்றம்… அதிரடி பரபரப்பு…

த.வெ.க கொடி… நேற்று இறக்கம்… இன்று ஏற்றம்… அதிரடி பரபரப்பு…

  • by Authour

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே  கார்குடி கிராமத்தில் அந்தர் பல்டி அடித்த தவெக மகளிர் அணி நிர்வாகி பிரியதர்ஷினி, தான் கட்சியிலிருந்து விலகுவதாக சொல்லவில்லை என தெரிவித்து, நேற்று கட்சி கொடியை இறக்கிய  நிலையில்மீண்டும் தவெக கட்சிக்கொடியை ஏற்றினார்.

அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே கார்க்குடி காலனி தெருவை சேர்ந்தவர் பிரியதர்ஷினி. இவர் தவெக மகளிர் அணி நிர்வாகியாக செயல்பட்டு வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் அப்பகுதியில் நடைபெற்ற தவெக  நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது, மகளிர்க்கு உரிய மரியாதை தரவில்லை என குற்றம் சாட்டி, கட்சியிலிருந்து விலகுவதாக கூறி அவர் பகுதியில் பிரியதர்ஷினி மூலம்

அமைக்கப்பட்டிருந்த கொடி கம்பத்திலிருந்து கட்சிக்கொடியை நேற்று இறக்கி, கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். இது
தவெக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் இன்று தவெகவின் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள், கார்க்குடி கிராமத்தில் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்த பிரியதர்ஷினி உள்ளிட்ட மகளிர் அணி நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனையடுத்து மீண்டும் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்ட பிரியதர்ஷினி, மாவட்ட செயலாளர் சிவா மூலம் நேற்று கொடிய இறக்கிய கொடிக்கம்பத்திலேயே, மீண்டும் இன்று தவெக கொடியை  ஏற்றினார்.

இது குறித்து பிரியதர்ஷினி செய்தியாளர்களிடம் பேசும்போது, நேற்று சில முரண்பாடுகளால் கொடிய இறக்கினோம். இன்று நானே மாவட்ட செயலாளரை வைத்து கொடியை ஏற்றி உள்ளேன். மீண்டும் கட்சியில் சேர்ந்தது விஜயின் கொள்கைகளால் தான்.  பொது இடத்தில் நான் தவெக கட்சியில் இருந்து வெளியே போறேன் அப்படின்னு சொல்லல, இன்று என்னுடைய முழு விருப்பத்தின் அடிப்படையில் கட்சிக் கொடியை ஏற்றி உள்ளதாக கூறினார்.

மாவட்ட மகளிர் அணி நிர்வாகி வாசாந்தி கூறும்போது, நேற்று சில முரண்பாடுகளால் இறக்கப்பட்ட கட்சி கொடி இன்று மாவட்ட செயலாளர் மூலம் ஏற்றப்பட்டது. தவெகவில் பெண்களுக்கு மரியாதை இல்லை மதிப்பில்லை என்று மற்றவர்களால் பரப்பப்படும் அவதூறு கருத்துக்கள் கண்டிக்கத்தக்கது. தவெகவில் பெண்களுக்கு பெரிய முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. கட்சிக்கொடி என்பது குழந்தை மாதிரி. அதை யாராலும் இறக்க முடியாது. பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பது தவெகவின் முக்கிய கொள்கையாக கொண்டுள்ளது. நேற்று சில முரண்பாடுகள் ஏற்பட்டது. அதன் உண்மை தன்மை தற்போது பிரியதர்ஷினி உள்ளிட்டோர் புரிந்து கொண்டுள்ளனர். நேற்று கட்சியில் இருந்து விலகுவதாக கூறியவர்கள், இன்று முழு சம்மதத்துடன் மகளிர் அணி பேச்சாளர் வாசாந்தி, மாவட்ட செயலாளர் சிவா முன்னிலையில் மீண்டும் கட்சியில் இணைந்துள்ளனர் என கூறினார்.