Skip to content
Home » சமையல் கூடம் பகுதியில் கழிவறை- ஊர்குப்பை தொட்டி… சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம்…

சமையல் கூடம் பகுதியில் கழிவறை- ஊர்குப்பை தொட்டி… சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம்…

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மோளையாண்டிப்பட்டி ஒன்றிய நடுநிலை பள்ளியில் 1 முதல் 5 வகுப்பு வரை 70-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயின்று வருகின்றனர்.

பள்ளி குழந்தைகளுக்கு உணவுகள் தயார் செய்யும் வகையில் சமையல் கூட அமைக்கப்பட்டுள்ளது அதன் ஒட்டியே கழிவறை, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மற்றும் குப்பைத்தொட்டி இருப்பதாலும் பல மாதங்களாக சுத்தம் செய்யாமல் புதர்கள் மண்டி கிடப்பதால் ஈக்களும்

கொசுக்களும், விஷ பூச்சிகள் அதிகமாக உருவாகி உள்ளது.

இதனால் பள்ளி குழந்தைகளுக்கு டெங்கு காய்ச்சல் மற்றும் பல்வேறு நோய்த்தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக பள்ளியில் கழிவறை மிகவும் மோசமான நிலையில் இருப்பதாலும் குப்பைகளை சரியான முறையில் அல்லாததாலும் அருகாமையில் இருக்கக்கூடிய பள்ளி சமையல் கூடத்தில் அமர்ந்து உணவு சாப்பிடுவதால் குழந்தைகளுக்கு பல்வேறு வகையான நோய் தொற்றுகள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே குப்பைத் தொட்டியையும், கழிவறையையும் இடமாற்றம் செய்து பள்ளி குழந்தைகளுக்கு ஏற்படும் பல்வேறு தொற்று நோய்களை தடுத்து நிறுத்த வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.