Skip to content
Home » உரிய இழப்பீடு கேட்டு…. கரும்புடன் விவசாயிகள் கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு…

உரிய இழப்பீடு கேட்டு…. கரும்புடன் விவசாயிகள் கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு…

  • by Authour

கரும்பு விவசாயிகளுக்கு காப்பீட்டுத் தொகை பெறுவது தொடர்பாக கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி மாவட்ட செயலாளர் மூர்த்தி தலைமையில் 20- மேற்பட்டோர் கரும்புகளை கையில் ஏந்தியவாறு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.

மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது: கரூர் மாவட்டத்தில் சுமார் 90 சதவீதம் கரும்பு விவசாயிகளுக்கு புகளூர் பகுயில் அமைந்துள்ள தனியார் சர்க்கரை ஆலைகளுக்கு பதிவு செய்யப்பட்டு கரும்பு பயிரிடப்பட்டு வருகின்றன கடந்த மூன்று ஆண்டுகளாக மஞ்சள் இலை நோயினால் கரும்புகள் அதிகம் பாதிக்கப்பட்டு வருவதாகவும், மேலும் சாதாரணமாக ஒரு ஏக்கருக்கு குறைந்தபட்சம் 40 முதல் 50 டன் வரை அறுவடை செய்யப்படும் நிலையில்

தற்போது கரும்புகளில் மஞ்சள் இலை நோயினால் அனைத்து கரும்பு முழுமையாக பாதிக்கப்பட்டு ஒரு ஏக்கருக்கு ஒரு டன் கூட அறுவடை செய்ய முடியாதா சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும்,

மேலும் கரும்பு விவசாயிகள் அனைவருக்கும் தனியார் சர்க்கரை ஆலைக்கு பதிவு செய்யும்போது காப்பீட்டு செய்யப்படுகிறது. ஆனால் தனியார் சர்க்கரை ஆலை நிர்வாகம் சார்பில் குறைந்த அளவு மட்டும் காப்பீடுத் தொகை வழங்கப்படுவதாகவும் முழுமையாக வழங்கப்படவில்லை எனவும், ஆகையால் தமிழக அரசு உடனடியாக ஒரு ஏக்கருக்கு 50,000 காப்பீட்டுத் தொகையும் காப்பீடு செய்யாதவர்களுக்கு ஒரு ஏக்கர் 25,000 நஷ்டஈடு தொகை பெற்று தரக்கோரி கரும்பு விவசாயிகள் சார்பாக கோரிக்கை மனு வழங்கினர்.

அதனைத் தொடர்ந்து வேளாண் துறை அலுவலர் நேரடியாக சென்று விவசாயிகளின் பாதிப்புகளை கேட்டறிந்தார். மேலும் மாவட்ட நிர்வாகம் சார்பில் கரூர் மாவட்டத்தில் கரும்பு பயிரிடப்பட்டுள்ள அனைத்து பகுதிகளிலும் ஆய்வு மேற்கொண்டு உரிய இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.