Skip to content
Home » ”ஹெல்மெட்” அணிவதன் அவசியம் குறித்து பெண்கள் விழிப்புணர்வு பேரணி….

”ஹெல்மெட்” அணிவதன் அவசியம் குறித்து பெண்கள் விழிப்புணர்வு பேரணி….

  • by Authour

கோவை, பொள்ளாச்சி தொழில் வர்த்தக சபை மற்றும் பல்வேறு அமைப்புகள் இணைந்து நடத்தும் பொள்ளாச்சி திருவிழா நேற்று துவங்கப்பட்டு வரும் 29.ஆம் தேதி வரை ஒன்பது நாட்களுக்கு தொடர்ச்சியாக வள்ளி கும்மியாட்டம், ரேக்ளா போட்டி, சிலம்பம், கபடி

பல்லாங்குழி மற்றும் பெண்களுக்கான சமையல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற உள்ள நிலையில் இன்று இரண்டாவது நாளாக பெண்கள் மட்டும் கலந்து கொள்ளும் இரு சக்கர வாகன பேரணி நடைபெற்றது.,

இதில் இரு சக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிந்து வாகனங்கள் ஓட்ட வேண்டும் என கூறி விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சுமார் 50க்கும் மேற்பட்ட வாகனங்களில் பெண்கள் பேரணியாக பொள்ளாச்சி நகர் முக்கிய பகுதிகளில் உள்ள பல்லடம் சாலை, புதிய திட்ட சாலை, கோவை சாலை உள்ளிட்ட பகுதிகளில் பேரணியாக சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.