திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் சக்தி நகர் பகுதியில் போட்டோ ஸ்டூடியோ பூட்டை உடைத்து கேமராவை தூக்கிச் சென்ற மர்ம நபர்கள் மூன்று பேரை திருவெறும்பூர் போலீசார் தேடி வருகின்றனர்.
திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் கைலாஷ் நகரை சேர்ந்தவர் ஆல்பர்ட் (48) இவர் காட்டூர் சக்தி நகரில் ஸ்டுடியோ வைத்து நடத்தி வருகிறார்.
இன்று அதிகாலை ஒரு மணி அளவில் 3 பேர் அடங்கிய மர்ம நபர்கள் கடையில் கொள்ளை அடிப்பதற்காக வந்துள்ளனர்.
அதில் ஒருவர் போட்டோஸ் வீடியோ பூடடை உடைத்தார். அப்பொழுது எதிர்திசையில் இருந்தவர்கள் யாரோ இதைப்பார்த்துபார்த்து உடனடியாக ஸ்டுடியோவின் உரிமையாளர் ஆல்பர்டிற்கு தகவல் கொடுத்துள்ளனர்.
அதன் அடிப்படையில் ஆல்பர்ட் திருச்சி காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்துள்ளார்.
அவர்கள் திருவெறும்பூர் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு திருவெறும்பூர் போலீஸ் வருவதற்குள் போட்டோ ஸ்டூடியோவின் கதவின் பூட்டை உடைத்து சட்டரை திறந்து உள்ளே இருந்த கண்ணாடி கதவை உடைத்து ஸ்டுடியோவில் இருந்த கேமரா, ஆயிரம் ரூபாய் பணம், மற்றும் 4பெண் டிரைவ் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு உடைத்த கண்ணாடி கதவு வழியாக வெளியில் வரும் பொழுது திருடனின் காலில் கண்ணாடி கிழித்து உள்ளது.
இதில் அந்த பகுதியில் அதிக அளவில் ரத்தம் கொட்டியுள்ளது.இந்நிலையில் திருவெறும்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வருவதற்குள் மூன்று பேரும் அங்கிருந்து இருசக்கர வாகனத்தில் தப்பித்துசென்று விட்டனர்.
இது அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. அதன் அடிப்படையில் திருவெறும்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வை இட்டதோடு இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.