Skip to content
Home » திருச்சி பொன்மலை பொறியாளருக்கு ரயில்வே விருது

திருச்சி பொன்மலை பொறியாளருக்கு ரயில்வே விருது

  • by Authour

இந்தியாவில் முதல் பயணிகள் ரயில் இயக்கியதை நினைவு கூரும் வகையில் ஆண்டுதோறும் ரயில்வே வார விழா கொண்டாடப்படுகிறது.

நாட்டின் 69-வது ரயில்வே வாரவிழாவை முன்னிட்டு ரயில்வே துறையில் சிறந்து விளங்கும் பணியாளர்களை பாராட்டுவகையில் ‘அதி விஷிஷ்ட் ரயில் சேவா புரஸ்கார்’ என்ற விருது வழங்கப்படும்.

இதில் தெற்கு ரயில்வேயில் இருந்து 8 பணியாளர்கள் தேர்வாகியுள்ளனர். இவர்களுக்கு 21ம்  தேதி டில்லியில்  நடைபெற்ற  விழாவில்   ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்  விருதுகள் வழங்கி கௌரவித்தார்.

உற்பத்தித் திறனை மேம்படுத்த பல கண்டுபிடிப்புகளுக்கு முன்னோடியாகயும், செயல் திறனை மேம்படுத்தி செலவுகளை குறைத்தமைக்காகயும், பொன்மலை ரயில்வே பணிமனையில் பணிபுரியும் மூத்த பொறியாளர் டி.எம்.கோபால கிருஷ்ணனுக்கு  ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் விருது வழங்கினார்.

விருது பெற்ற டி.எம்.கோபாலகிருஷ்ணனை   திருச்சி ரயில்வே நிலையத்தில் மக்கள் சக்தி இயக்க மாநிலப் பொருளாளரும், தண்ணீர் அமைப்பு செயல் தலைவருமான கே.சி.நீலமேகம், ரயில்வே சீனியர் பொறியாளர் மோகன்தாஸ், சீனிவாசன், சிந்தாமணி, சஹானா பிரியதர்ஷினி,அபிஷேக் ராகவ்,காவ்யா பிரியதர்ஷினி, மோகன்,உதயா மற்றும் பொன்மலை ரயில்வே தொழிலாளர்கள், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினா்  பொன்னாடை போர்த்தி,நினைவு பரிசுகள் வழங்கி பாராட்டினார்கள்.