Skip to content
Home » டில்லியில் கராத்தே போட்டி…5 தங்கப்பதக்கம்…தஞ்சையில் உற்சாக வரவேற்பு…

டில்லியில் கராத்தே போட்டி…5 தங்கப்பதக்கம்…தஞ்சையில் உற்சாக வரவேற்பு…

டில்லியில் கடந்த 17, 18 ஆகிய நாட்களில் தேசிய அளவிலான சாம்பியன்ஷிப் கராத்தே போட்டி நடைபெற்றது. 8 வயது முதல் 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு நடந்த இந்த போட்டியில் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
அதன்படி தமிழகம் சார்பில் தஞ்சை கிங்கு சிட்டோ ரியோ ஸ்போர்ட்ஸ் கராத்தே டு இந்தியா அகாடமி தலைவரும் பயிற்சியாளருமான அன்பரசன், பயிற்சியாளர் ஆபிரகாம் ஆகியோர் தலைமையில் அகடமியை சேர்ந்த 9 மாணவ- மாணவிகள் கலந்து கொண்டு விளையாடினர்.
அவர்கள் அனைவரும் வெற்றி பெற்று 5 தங்கப்பதக்கங்கள், 4 வெள்ளி பதக்கங்கள் வென்று சாதனை படைத்தனர்.
இந்த நிலையில் தஞ்சை ரெயில் நிலையத்தில் இன்று சாதனை படைத்த 9 மாணவ- மாணவிகள், அவர்களுக்கு பயிற்சி அளித்த அகடாமி தலைவரும் பயிற்சியாளருமான அன்பரசன், பயிற்சியாளர் ஆபிரகாம் ஆகியோரை பா.ஜ.க மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம், தெற்கு மாவட்ட தலைவர் ஜெய் சதீஷ், மாவட்ட பொருளாளர் வினாயகம் மற்றும் சக கராத்தே மாணவ -மாணவிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.