கோவை சேரன் மாநகர் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்ட பிரபு. ஐ டி ஊழியர். இவரது நண்பர் ஹரிஷ் என்பவரும், இவர்களுக்கு கோவையில் வசிக்கும் பீகாரை சேர்ந்த குந்தன்ராஜ் என்பவரின் அறிமுகம் கிடைத்தது.
சில தினங்களுக்கு முன் மணிகண்டபிரபு உள்பட 3 பேரும் பீகார் சென்று அங்கிருந்து ஒரு கைத்துப்பாக்கியையும், 6 தோட்டாக்களையும் திருட்டுத்தனமாக வாங்கி வந்து உள்ளனர். மணிகண்ட பிரபுவுக்காக இந்த துப்பாக்கியை வாங்கி வந்து உள்ளனா்.
கோவை வந்த மணிகண்ட பிரபு அந்த துப்பாக்கியை பதுக்கி வைத்து உள்ளார். இதுபற்றிய தகவல் கோவை தீவிரவாத தடுப்பு பிரிவு
போலீசாருக்கு கிடைத்தது. n போலீசார் மணிகண்ட பிரபு தங்கிருந்த வீட்டுக்கு சென்று கள்ளத்துப்பாக்கி மற்றும் 6 தோட்டாக்களையும் பறிமுதல் செய்தனர். அத்துடன் மணிகண்டபிரபு, ஹரிஷ், குந்தன்ராஜ் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்கள் 3பேரும் பீளமேடு போலீசில் ஒப்படைக்கப்பட்டனர். 3பேரிடமும் போலீசார் துருவி துருவி விசாரிக்கிறார்கள். ஐடி ஊழியர் திருட்டுத்தனமாக துப்பாக்கி வாங்கியது ஏன், அவர் யாரையும் கொலை செய்யும் நோக்கி வாங்கினாரா என்ற கோணத்தில் விசாரணை நடக்கிறது. இந்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.