Skip to content
Home » கோழைச்சாமியின் பொய் கணக்கு.. புள்ளி விபரங்களுடன் முதல்வர் ஸ்டாலின் பேச்சு..

கோழைச்சாமியின் பொய் கணக்கு.. புள்ளி விபரங்களுடன் முதல்வர் ஸ்டாலின் பேச்சு..

  • by Authour

திமுக செயற்குழு கூட்டம் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இறுதியில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது.. காத்துல கணக்கு போட்டு கற்பனையில கோட்டை கட்டும் வேலையை கொஞ்சநாளா எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி செய்துட்டு வர்றார். அதோட ஒரு தேர்தல் கணக்கையும்  சொல்லிட்டு வர்றார். அம்மையார் ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்குல திருவாளர் குமாரசாமி போட்ட கணக்கையே மிஞ்சுற மாதிரி அது இருக்கு.  அதவாது கடந்த 2024 நாடாளுமன்ற தேர்தல்ல அதிமுக வாக்கு சதவீதம் 1 விழுக்காடு உயர்ந்திருக்கு”-னு அவர் உளறி இருக்கார். இல்லாததை இருப்பதுபோல ஊதிப்பெருக்கிக் காட்டுவது பழனிசாமிக்கு கைவந்த கலைதான். 2019 நாடாளுமன்றத் தேர்தல்ல 20 தொகுதிகள்ல போட்டியிட்ட அதிமுக 19.4 விழுக்காடு வாக்குகளை வாங்குச்சு. இதுவே 2024 நாடாளுமன்ற தேர்தல்ல 34 தொகுதிகள்ல போட்டியிட்டும் வெறும் 20.4 விழுக்காடு வாக்குகளைத்தான் வாங்கியிருக்கு. எடப்பாடி சொல்ற மாதிரி பார்த்தா 32.98 விழுக்காடு வாக்குகளை 2024 தேர்தல்ல பெற்றிருக்கணும்.  ஆனா, அதைவிட 12.58 விழுக்காடு வாக்குகள் குறைவாதான் வாங்கியிருக்கு. எளிமையா  சொன்னா, 2019-ல சராசரியா ஒரு தொகுதிக்கு 4.16 லட்சம் வாக்குகள் வாங்குன அதிமுக – 2024-ல வெறும் 2.61 லட்சம் வாக்குகள்தான் வாங்கியிருக்கு. ஒவ்வொரு தொகுதிலயும் சராசரியா 1.5 லட்சம் வாக்குகளை இழந்திருக்கு எடப்பாடி தலைமையிலான அதிமுக. இப்படி, மக்களால் நிராகரிக்கப்பட்டு ஓரங்கட்டப்பட்ட பழனிசாமி, அதிமுக தொண்டர்களுக்கு சாதாரண கூட்டல் வகுத்தல் கணக்கே தெரியாதுனு நம்பி பொய்க்கணக்கை அவிழ்த்துவிட்டிருக்கார். அவர் சொன்ன கணக்கை அடிப்படை அறிவுள்ள அ.தி.மு.க. காரங்களே நம்ப மாட்டாங்க. அதே மாதிரி கோழைச்சாமியான பழனிசாமி டங்ஸ்டன் சுரங்க அனுமதிக்கு எதிரா பா.ஜ.க.வ கண்டிச்சாரா?
புரட்சியாளர் அம்பேத்கரை கொச்சைப்படுத்துன ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு எதிரா கீச்சுக்குரலிலாவது கத்துனாரா? பிரதமர எதிர்த்துப் பேசுற துணிவு அவருக்கு இருக்கா? தி.மு.க என்றால் மட்டும் சட்டமன்றத்துலயும் கத்தி பேசுறாரு. வெளியிலயும் கத்திப் பேசுறாரு. பழனிசாமி அவர்கள் என்னதான் கத்துனாலும் எப்படித்தான் கதறுனாலும் அவரோட துரோகங்களும் குற்றங்களும்தான் எல்லாருக்கும் ஞாபகம் வரும். நான் அவரை நோக்கி சவாலாவே கேட்குறேன். தி.மு.க என்றால் கொள்கையும் அதை நிறைவேத்துவதற்கான தியாகமும்தான் அடிப்படை. உங்களோட அரசியலுக்கு என்ன அடிப்படை துரோகத்தைத் தவிர உங்களுக்கு பெருமையா சொல்லிக்க என்ன இருக்கு? இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.