வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய்சேதுபதி ,மஞ்சு வாரியார் , சூரி, கெளதம் வாசுதேவ் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் விடுதலை பாகம் 2. எல்ரெட் குமார் தயாரித்துள்ள இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். ஏற்கனவே விடுதலை பாகம் 1 வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றிருந்த நிலையில் இரண்டாம் பாகத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்தது.
அந்த எதிர்பார்ப்புடன் நேற்று(20.12.2024) வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் வசூலிலும் வெற்றிமாறன் இயக்கிய படத்தில் அதிக வசூல் ஈட்டிய படமாக இப்படம் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இப்படம் குறித்து நடிகை மஞ்சு வாரியர், தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், “மகாலட்சுமி
கதாபாத்திரத்துக்காக நன்றி வெற்றிமாறன் சார்” எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் வெற்றிமாறனுடன் இருக்கும் படப்பிடிப்பு தள புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார். முன்னதாக வெற்றிமாறன் இயக்கிய அசுரன் படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி கடைசியாக ரஜினியுடன் வேட்டையன் படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது தமிழில் ஆர்யா – கௌதம் கார்திக் நடிப்பில் உருவாகும் மிஸ்டர் எக்ஸ் படத்தில் நடித்து வருகிறார்.