திருச்சி சர்வதேச விமான நிலையத்தில்
போலி பாஸ்போர்ட்டில் கோலாலம்பூரில் இருந்து திருச்சி வந்த பயணி கைது
திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் நேற்று கோலாலம்பூர் இருந்து திருச்சிக்கு விமானம் வந்தது இது விமானத்தில் வந்து இறங்கிய பயணிகளை இமிகிரேசன் அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்பொழுது திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பகுதியை சேர்ந்த செல்வகுமார் (வயது 52) என்ற பயணியின் பாஸ்போர்ட் வாங்கி சோதனை செய்தபோது அவருடைய பாஸ்போர்ட்டில் பிறந்த தேதியை மாற்றி போலி பாஸ்போர்ட்டில் வந்தது தெரிய வந்தது .
இதையடுத்து இமிக்கிரேசன் அதிகாரி ஏர்போர்ட் போலீசில் புகார் கொடுத்தார்.புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து செல்வகுமாரை கைது செய்துள்ளனர்.
டூவீலர் மோதி முதியவர் சாவு…
திருச்சி ரஞ்சிதபுரம் வள்ளுவர் தெருவை சேர்ந்தவர் தாஜுதீன் (66 )இவர் நேற்று திருச்சி டிவிஎஸ் டோல்கேட்டில் இருந்து பால் பண்ணை சர்வீஸ் ரோடு பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்பொழுது அந்த வழியாக வந்த ஒரு இருசக்கர வாகனம் அவர் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த தாஜுதீன் ஆபத்தான நிலையில் திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.இந்த சம்பவம் குறித்து தெற்கு போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.