27-வது ஜேகே டயர் கார் பந்தயத்தின் நோவிஸ் கோப்பை காண எப்எம்எஸ்சிஐ தேசிய பந்தய சாம்பியன்ஷிப் போட்டியின் ஒரு பகுதியாக கோவை மாவட்டம் செட்டிபாளையம் காரி மோட்டார் ஸ்பீட்வேயில் நேற்றும் இன்றும் ஜேகே டயர் நோவிஸ் கோப்பை கார் பந்தயம் நடைபெற்றது. இந்த இரண்டு நாட்கள் போட்டியில் இதில் 7 அணிகளை சேர்ந்த 22 வீரர்கள் பங்கேற்றனர். மொத்தம் 5 போட்டிகள்
நடைபெற்றது. ஒவ்வொரு போட்டியில் தலா 15 சுற்றுகள் நடைபெற்றது. இந்த போட்டியில் வெற்றி பெற்றவர்கள் 2024-ம் ஆண்டின் ஒட்டுமொத்த சாம்பியனாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்கள். இதில் நாடு முழுவதும் இருந்து பங்கேற்கும் இளம் வீரர்கள் தங்களின் திறமையை வெளிப்படுத்தும் விதமாக பங்கேற்றனர்.