கோவை, தடாகம் சாலை கணுவாய் அடுத்த நர்சரி பகுதியில் சிலிண்டர்களை ஏற்றிச் சென்ற வேன் சாலையின் நடுவே கவிழ்ந்து விபத்திற்கு உள்ளானது. ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து வேன் கவிழ்ந்ததாக கூறப்படுகிறது. இதில் பெரும் உயிர் சேதம் ஏற்படாத
நிலையில் உடனடியாக வேனில் இருந்து கீழே விழுந்த சிலிண்டர்களை பொதுமக்கள் உடனடியாக எடுத்து சாலையோரம் வைத்து வேனையும் சாலையோரம் நிமிர்த்தி ஓரம் கட்டினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.