Skip to content

கரூர்…. வெண்ணைமலை கோவிலுக்கு சொந்தமான 18 இடங்களுக்கு சீல்… போலீஸ் குவிப்பு..

கரூர் அடுத்த வெண்ணைமலையில் அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோவிலை சுற்றி பல நூறு ஏக்கர் கோவிலுக்கு சொந்தமான இடங்கள் இருப்பதாகவும், அதில் இருக்கும் குடியிருப்புகளை தவிர வர்த்தக கடைகள், விவசாய நிலங்களை உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், மீட்கும் பணியில் அறநிலையத்துறை அதிகாரிகள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். கடந்த மாதம் சீல் வைக்கும் பணி நடந்த போது பொதுமக்களுக்கும், போலீசாருக்கும் கடும் வாக்குவாதம், தள்ளு முள்ளு ஏற்பட்டது.

கோவிலுக்கு சொந்தமான இடங்களை டிஜிட்டல் சர்வே செய்யும் பணியில் அறநிலையத்துறை அதிகாரிகள் ஈடுபட்டனர். இந்நிலையில்

இன்று காலை அப்பகுதிக்கு வந்த இந்து சமய அறநிலையத்துறை திருப்பூர் உதவி ஆணையர் ரமணி காந்தன் தலைமையிலான அதிகாரிகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வர்த்தக கடைகளுக்கு சீல் வைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அதிகாரிகளுக்கு பிரச்சினை ஏற்படாமல் இருக்க, அப்பகுதியில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது ஏடிஎம், கோவில் உட்பட 18 இடங்கள் சீல் வைக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

குறிப்பாக அறநிலையத்துறை சார்பில் ஏற்கனவே சீல் வைக்கும் பணி நடைபெறும் என அறிவித்திருந்த நிலையில் ஒரு சில ஆக்கிரமிப்பாளர்கள் தங்களுக்கு சொந்தமான பொருட்களை எடுத்துக்கொண்டு, கடைகளை காலி செய்துவிட்டு சட்டர் கதவுகளை அகற்றி சென்றதால், தகர சீட்டுகள் வைத்து அடைக்கும் பணியானது நடைபெற்று வருகிறது.

error: Content is protected !!