கரூர் அருகே உள்ள மணல்மேடு பகுதியில் ஏராளமான டெக்ஸ்டைல் நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் அப்பகுதியில் உள்ள அம்மன் டிரேடர்ஸ் என்ற தனியார் டெக்ஸ்டைல் நிறுவனத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கரூர் தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினருக்கு தகவல் கொடுத்ததன் அடிப்படையில் இரண்டு வாகனத்தில் வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தீ மேலும் பரவுவதால் தற்பொழுது ஒரு வாகனம் வரவழைக்கப்பட்டு மொத்தம் மூன்று வாகனங்களில் தீயை அணைத்து வருகின்றனர்.
இன்று டெக்ஸ்டைல் நிறுவனம் கடை விடுமுறை என்பதால் உள்ளே யாரும் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. மேலும்
மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா அல்லது வேறு ஏதாவது காரணமா என்பது குறித்து காவல்துறை சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக டெக்ஸ்டைல் நிறுவனத்தில் பேக்கிங் செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த பல லட்சம் மதிப்பிலான துணிகள் எரிந்து நாசமாகி உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் டெக்ஸ்டைல் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காணப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.