Skip to content
Home » நாடாளுமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

நாடாளுமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

  • by Authour

நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் இன்று காலை 11 மணியளவில்தொடங்கின. அப்போது, மத்திய மந்திரி அமித்ஷா மன்னிப்பு கேட்பதுடன் தனது பதவியை ராஜினாமான செய்ய வேண்டும் என்றும் ராகுல் காந்தி மீதான வழக்குப்பதிவு நடவடிக்கையை கண்டித்தும் மக்களவையில் எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன. இந்தியா கூட்டணி எம்.பிக்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டத்தால் வந்தே மாதரம் பாடல் ஒலிக்கப்பட்டது. இதனால் முழக்கத்தில் ஈடுபட்ட எம்.பி.க்கள் அமைதியாக நின்று மரியாதை அளித்தனர். வந்தேமாதரம் பாடலுடன் அவை அலுவல் முடிந்தது. எதிர்க்கட்சிகள் அமளியால் அவையை அதன் தலைவர் ஓம் பிர்லா தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பதாக அறிவித்தார். முன்னதாக, ராகுல் காந்திக்கு எதிராக உரிமை மீறல் கடிதத்தை பாஜக எம்.பி.க்கள் அவைத் தலைவர் ஓம் பிர்லாவிடம் அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மாநிலங்களவையிலும் இதே பிரச்னை எதிரொலித்தது. எனவே  மாநிலங்களவையை மதியம் 12 மணிக்கு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார் அவைத்தலைவர் ஜெகதீப் தன்கர்.