திருச்சியில் நெகிழி பொருள்கள் வைத்திருப்பதாக வந்த தகவலின் பேரில் சோதனை நடத்திய மாநகராட்சி அலுவலர் நேற்று தாக்கப்பட்டார். தமிழகத்தில் நெகிழிப்பைகள், குவளைகள் உள்ளிட்டவைகளுக்கு தடை விதித்துள்ளது. திருச்சி மாநகராட்சியில் புத்தூர் பகுதியில் நெகிழிப்பைகள் விற்பனை செய்யப்படுவதாக எழுந்த புகாரின் பேரில், மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் ஆல்பர்ட் தலைமையில் மாநகராட்சி பணியாளர்கள், புத்தூர் அரசு ஆஸ்பத்திரி எதிரே உள்ள ஓரு தேநீரகத்தில்நேற்று மாலையில் சோதனைக்கு சென்றனர். அப்போது கடையிலிருந்தவர்கள் சோதனைக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். இதனையடுத்து இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதமும் தொடர்ந்து தகராறும் ஏற்பட்டது. இதில் கடையிலிருந்தவர்கள் தாக்கியதில் சுகாதார ஆய்வாளர் ஆல்பர்ட் காயமடைந்து திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பாக அளித்த புகாரின் பேரில் அரசு மருத்துவமனை போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்