Skip to content

ஆழியாறு அணை நிரம்புகிறது… கரையோர மக்களுக்கு எச்சரிக்கை..

  • by Authour

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு அணை 120 அடி கொண்டது ,கடந்த வாரத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வந்த தொடர் மழையால் ஆழியார் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து காணப்பட்டது.,

120 அடி உயரம் கொண்ட அணை தற்போது 119.20 அடியை எட்டி உள்ளதால் அணையின் பாதுகாப்பு கருதி எந்த நேரத்திலும் உபரி நீர் திறக்க வாய்ப்பு உள்ளதால் ஆழியார் அணை கரையோரம் உள்ள மக்கள் ஆற்றில் இறங்க வேண்டாம். ஆற்றில்  குளிக்க செல்லவோ, கால்நடைகளை ஆற்றின் பகுதிக்கு கொண்டு செல்லவோ  வேண்டாம் எனவும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும் பொதுப்பணித்துறையினர் கூறி வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர்.,

error: Content is protected !!