Skip to content
Home » புதுச்சேரியில் 6 ஆண்டுக்கு பிறகு பஸ் கட்டணம் உயர்வு

புதுச்சேரியில் 6 ஆண்டுக்கு பிறகு பஸ் கட்டணம் உயர்வு

  • by Authour

புதுச்சேரியில் பஸ் கட்டணம் கடந்த 2018 ம் ஆண்டு உயர்த்தப்பட்டது அதை அடுத்து தற்போது  உயர்த்தப்படுகிறது.

இது தொடர்பாக  போக்குவரத்து துறை கூடுதல் செயலர் சிவக்குமார் தற்போது வெளியிட்டுள்ள உத்தரவு விவரம்: ஏ.சி., வசதி இல்லாத டவுன் பஸ்களுக்கு குறைந்தபட்ச கட்டணம் 5-ல் இருந்து 7 ரூபாய் ஆகிறது., அதிகப்பட்ச கட்டணம் 13-ல் இருந்து 17 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது குறைந்த பட்சம் 2 ரூபாய், அதிகபட்சம் 4 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. ஏ.சி., டவுன் பஸ் குறைந்தபட்ச கட்டணம் 10-ல் இருந்து 13 ஆகவும், அதிகபட்ச கட்டணம் 26-ல் இருந்து 34 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது குறைந்தபட்ச கட்டணம் 3-ம், அதிகப்பட்ச கட்டணம் 8 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

டீலக்ஸ்  ஏ.சி. அல்லாத பஸ்களுக்கு, ஏ.சி., டவுன் பஸ்களுக்கான கட்டணமே நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில் டீலக்ஸ் ஏ.சி., பஸ்களுக்கு குறைந்தபட்ச கட்டணம் 12-ல் இருந்து 16 ஆகவும், அதிகபட்ச கட்டணம் 36-ல் இருந்த 47 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

ஏ.சி.. அல்லாத எக்ஸ்பிரஸ் பஸ்கள் புதுச்சேரி எல்லைக்குள் கி.மீ.,க்கு 0.75 பைசா என்பது 0.98 பைசாவாக உயர்த்தப்பட்டுள்ளது. 25 கி.மீ., வரை 20 என, இருந்த குறைந்தபட்ச கட்டணம் 25 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

ஏ.சி., எக்ஸ்பிரஸ் பஸ்கள் புதுச்சேரி எல்லைக்குள் கி.மீ., 1.30 என்பது தற்போது ரூ.1.69 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. முதல் 25 கி.மீ., 50 ரூபாய் வசூலிக்கலாம்.

புதுச்சேரி நகர பகுதிக்குள் ஏ.சி., வால்வோ பஸ் கி.மீ.,க்கு 1.70 என்பது தற்போது 2.21 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது, முதல் 30 கி.மீ.,க்கு 54 ஆக இருந்த கட்டணம் தற்போது 70 ரூபாயாக உயர்ந்துள்ளது. இந்த கட்டண உயர்வு முதல்வர் அறிவிப்புக்குப் பிறகு ஓரிரு நாட்களில் நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.