அரியலூர் மாவட்டம், செந்துறையில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்ற சிறப்பு திட்டத்தின் கீழ், மாவட்ட ஆட்சியர் பல்வேறு பகுதிகளில் கள ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் இரவு செந்துறை மாணவியர் விடுதிக்கு சென்ற ஆட்சியர் அங்கு தயார்செய்யப்பட்டிருந்த இரவு உணவை பார்வையிட்டார்.
அப்போது விடுதி வார்டனிடம், எத்தனை மாணவிகள் தங்கியுள்ளனர் எனக் கேட்டறிந்து விடுதியின் உள்ளே சென்று ஆய்வு மேற்கொண்டார். மாணவிகளுக்கு தயார் செய்யப்பட்டிருந்த இரவு உணவு வெஜிடபிள் பிரியாணியை பார்த்த மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி,
இன்னைக்கு வந்து பார்த்தால் நல்லா தான் இருக்கும் போல இருக்கே?,
நாளைக்கு வந்து பார்த்தால் தான் தெரியும் என சிரித்த படி கேட்டார்.
மேலும் வெங்காய பச்சடியை பார்த்து, இது பத்துமா என கேள்வி எழுப்பினார்.பின்னர் குருமாவை பார்த்து, இது என்னவென்று தெரியவில்லை, உருளைக்கிழங்கு உள்ளதால் இதை குருமா என்கிறீர்கள் என சிரித்து கொண்டே நடக்க ஆரம்பித்தார்.
பின்னர் விடுதியில் எத்தனை மாணவிகள் தங்கி உள்ளீர்கள், உணவு நல்லபடியாக உள்ளதா?, இங்கு உணவுகள் பட்டியலின் படி அவர்கள் தயார் செய்து கொடுக்கிறார்களா? வேறு ஏதேனும் குறைகள் உள்ளதா? நல்லபடியாக தூங்க முடிகிறதா , என்ன படிக்கிறீர்கள் என்று பல கேள்விகளை விடுதியில் தங்கியிருந்த மாணவிகளிடம் கேட்டுவிட்டு, அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.