2018-ல் திருச்சி விமான நிலையத்திகு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் வந்திருந்தனர். அப்போது விமான நிலைய வளாகத்தில் இரு கட்சிகளின் தொண்டர்களும் பயங்கரமாக மோதிக்கொண்டனர். இந்த மோதல் தொடர்பாக திருச்சி போலீசார் நா.த.க. தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் அந்த கட்சி நிர்வாகிகள் மீதும், மதிமுகவினர் மீதும் வழக்கு தொடர்ந்தனர். இந்த மோதல் வழக்கு விசாரணைக்காக திருச்சி நீதிமன்றத்தில் சீமான் இன்று ஆஜரானார். வழக்கு விசாரணையை ஜனவரி 29-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.