தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் அமுதம் மக்கள் அங்காடிகள் மூலம் ரூ.999/- விலையில் 20 மளிகைப் பொருட்கள் அடங்கிய கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு சிறப்பு மளிகைத் தொகுப்பு விற்பனைத் திட்டத்தினை அமைச்சர் சக்கரபாணி தொடங்கி வைத்தார்.
வெளிச்சந்தை விலையினைக் கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் துவக்கப்பட்ட அமுதம் பல்பொருள் அங்காடிகளில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைப்படி, சென்னை கோபாலபுரம் மற்றும் அண்ணாநகரில் இயங்கி வரும் அங்காடிகள் முதற்கட்டமாக நவீனமயமாக்கப்பட்டு துணை முதலமைச்சர் மற்றும் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டு, தரம்/சரியான விலை/ உங்களின் தேர்வு என்ற வகையில் பொதுமக்களின் ஆதரவுடன் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.
இந்த சிறப்பு மளிகைத் தொகுப்பின் விற்பனை முதற்கட்டமாக சென்னை அண்ணாநகர், கோபாலபுரம் அமுதம் மக்கள் அங்காடிகளில் செயல்படுத்தப்படுகிறது. கிறிஸ்துமஸ்/ஆங்கிலப் புத்தாண்டு சிறப்பு மளிகைத் தொகுப்பு விற்பனைத் தொடக்க விழா கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர், ஜெ.ராதாகிருஷ்ணன், தலைமையிலும், சென்னை மாநகராட்சி துணை மேயர் .மகேஷ்குமார், பெருநகர சென்னை மாநகராட்சி பணிகள் குழுத் தலைவர் நே.சிற்றரசு, பெருநகர சென்னை மாநகராட்சி 102-வது வார்டு மாமன்ற உறுப்பினர் ராணி ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது. இந்நிகழ்வில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக நிர்வாக இயக்குநர் ஆ.அண்ணாதுரை , உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் இயக்குநர் .த.மோகன், ., தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவனத்தின் தலைவர் .ப.ரங்கநாதன், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக உயர் அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.