நாடாளுமன்றத்தில் அரசியலமைப்புச் சட்டம் மீதான விவாதத்தின்போது உள்துறை அமைச்சர் அமித் ஷா, டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் மரபு குறித்துப் பேசினார். அப்போது, “இன்றைய சூழலில் அம்பேத்கரின் பெயரைப் பயன்படுத்துவது, ஒரு ஃபேஷன் ஆகிவிட்டது”
அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர்… இந்த அளவுக்கு கடவுளின் பெயரைப் பயன்படுத்தினால், ஏழு பிறவிகளுக்கும் நாம் சொர்க்கத்தை அடையலாம்” என்று அமித் ஷா தெரிவித்தார்.
அமித் ஷா வின் இந்த பேச்சுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டுள்ளன. தமிழ்நாட்டில் இன்று திமுக, விசிக போன்ற கட்சிகள் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளன. அம்பேத்கரை இழிவுபடுத்திய அமித்ஷாவை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என அவர்கள் முழக்கமிட்டனர். மநீம தலைவர் கமல், தவெக தலைவர் விஜய் உள்ளிட்டோரும் அமித்ஷா பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து உள்ளனர்.
அம்பேத்கரை இழிவுபடுத்திய அமித்ஷாவை பதவியில்இருந்து நீக்க வேண்டும் என வலியுறுத்தி டில்லியில் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணி எம்.பிக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு ராகுல், பிரியங்கா ஆகியோர் நீலநிற உடை அணிந்து வந்திருந்தனர். அவர்கள் அமித்ஷாவை பதவியில் இரந்து நீக்கும்படி கோஷங்கள் எழுப்பினர். இந்த கோரிக்கையை வலியுறுத்தும் பேனர்களும் வைத்திருந்தனர்.
இந்த போராட்டத்தில் பங்கேற்க நாடாளுமன்றம் வந்த ராகுல் காந்தியை பாஜக எம்.பிக்கள் தடுத்து போராட்டம் நடத்தக்கூடாது மிரட்டல் விடுத்ததாக ராகுல் குற்றம் சாட்டினார்.
இந்தியா கூட்டணி எம்.பிக்கள் போராட்டத்திற்கு எதிராக பாஜக எம்.பிக்களும் எதிர் போராட்டததில் ஈடுபட்டனர். இது தரப்பினரும் எதிரும் புதிருமாக நின்று கோஷங்கள் போட்டனர். திடீரென ஒருவரையொருவர் தள்ளிவிட்டனர். இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் பாஜக எம்.பி பிரதாப் சந்திர சாரங்கி கீழே விழுந்தார். இதில் அவரது தலையில் இருந்து ரத்தம் வழிந்தது. உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தொடர்ந்து இரு தரப்பினரும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
ராகுல் காந்தி தள்ளிவிட்டவர் தான் என் மீது விழுந்தார். இதனால் தான் நான் கீழே விழுந்தேன் என எம்.பி. பிரதாப் சந்திர சாரங்கி கூறினார். இது தொடர்பாக போலீசில் புகார் செய்ய இருப்பதாகவும் பாஜகவினர் தெரிவித்தனர். இந்த நிலையில் மக்களவை தொடங்கிய ஒரு நிமிடத்தில் அவையை சபாநாயகர் ஓம்பிர்லா மதியம் 2 மணி வரை ஒத்திவைத்தார்.